பக்கம்:ஈச்சம்பாய்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

ஈச்சம்பாய்



யூ.டி.ஸி.,யான சேகர், எஸ்டி.சி.,களான மயன், மஞ்சுளா, இந்திரா, ராமஜெயம்... கடைசியில் மீனா. பிறகு 'கிளாஸ் போர்' வரிசை..

மீனா, தேர் நகர்வதுபோல் நகர்ந்து, காசாளன் அருகே போனபோது, டெப்திரி சண்முகம் குரலிட்டான்... ஒரு ஒதுக்குப்புறத்து நாற்காலி மேஜையில் காகிதக் கட்டுக்கள், ஊதுவத்திகள், தடித்த கவர்கள், பிரசவிக்கப் போவது போன்ற டெஸ்பாட்ச்டயரி ரிஜிட்டர்களோடு தனிக்குடித்தனம் நடத்துகிறவன்.

'இந்தாப்பா... முரளி... உன் ஆத்தாவுக்கு இப்போ எப்படி இருக்குது?'


'அந்தக் கவலை உனக்கு ஏன்?'

'என்னப்பா நீ.. மூஞ்சில அடிச்சாப்போல...

'எங்கம்மா கார்ல அடிபட்டு ஆஸ்பத்திரில இருந்த சமயத்துல கேட்காம, 'டிஸ்சார்ஜ்' ஆன பிறகு கேட்கிறே- நீ எதுக்கு கேட்கிறேன்னு எனக்கு தெரியாதா?"

"நேர்மையா இருக்கிற நான், நேர்மையாய் நேரடியாகவே கேட்டிருக்கணும்! எம்மேலத்தான் தப்பு! உங்கம்மா எப்படிப் போனால் எனக்கென்ன? இந்த மாதச் சம்பளத்துல சொஸைட்டிக் கடன பிடிக்காதே, ஓ.டி., பேமென்ட்ல பிடிச்சால் போதும்!"

“என்கிட்ட எதுவும் பேசாதே. சொஸைட்டிக் கட்ன தயவு தாட்சண்யம் இல்லாமல் பிடிக்கணுமுன்னு டெப்டி டைரக்டர் சொல்லிட்டார்."

"அவர, எப்படி, யார் சொல்ல வச்சிருப்பாங்கன்னு எனக்கும் தெரியும். அவரையே, உங்கிட்ட வேற மாதிரி சொல்ல வைக்கிறேன் பார்க்கிறியா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/60&oldid=1372017" இலிருந்து மீள்விக்கப்பட்டது