பக்கம்:ஈச்சம்பாய்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

61



"அவர் வரதட்சணையே வாங்கல சார். வேண்டான்னுட்டார் சார்..."

"குட்.- ஆம்பளைன்னா அப்படித்தான் இருக்கணும்! என் சம்பளம் என்னய்யா ஆச்சு? சம்பளமுன்னு வந்தால் நான் ஜூனியர்.....

'வழக்கப்படி ஒங்க ரூமுக்குள்ள வந்துதானே கொடுப்பேன் கொண்டு வாறேன் சார்! இப்பவே சார்....இமிடியேட்லி சார்...

"ஏய்யா.. ஏ.ஓ.ன்னா ஜோக்கே அடிக்கப்படாதா? அப்புறமாய் கொண்டு வா..."

நிர்வாக அதிகாரி உள்ளே போய்விட்டார். கடன்கார ஆசாமிகளோடு, புதிதாய் வந்த கந்து வட்டிக்காரனும் சேர்ந்து கொண்டு அனைவரும் உள்ளே வந்தனர். டிரைவர் மணியின் மனைவி எங்கிருந்தோ ஓடி வந்தாள். முரளி, மீனாவைக் கெஞ்சினான்.

"அவர்கிட்ட வாய் தவறிச் சொல்லிட்டேன். ஸ்வீட், காரம் வகையறாவுக்கு ஒரு ஐம்பது ரூபாய் தர்றீங்களா?"

"இன்னாப்பா முரளி... அந்தப் பாப்பாவை 'லஞ்ச்' வாங்கிக் கொடுக்கச் சொல்லு. வரதட்சணை கேட்காத மாப்பிள்ளை லேசாய் கிடைத்திருக்கே"

"நீயெல்லாம் இருக்கியே... ஊரான் வீட்டு நெய்யே"

மீனா மேற்கொண்டு முரளியைப் பேச விடாது சொன்னாள்: 'இப்போ ஸ்வீட், காரம் நாளைக்கு லஞ்ச்' தயவு செய்து மத்தியான சாப்பாடு கொண்டு வராதீங்கோ'

"அப்பாடா... எனக்கு கால் கிலோ அரிசி மிச்சம்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/63&oldid=1371958" இலிருந்து மீள்விக்கப்பட்டது