பக்கம்:ஈச்சம்பாய்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

ஈச்சம்பாய்


வயிற்றைத் தடவியபடியே சிரித்துக் கொண்ட மணியின் மனைவியை எல்லாரும் அசிங்கமாய் பார்த்தபோது, மீனா வினவினாள்:

“எவ்வளவு பணம் வேணும் முரளி சார்?”

முரளி, அலுவலகத்தாரின் முகம் பார்த்து எண்ணினான். டெபுடி டைரக்டரையும், நிர்வாக அதிகாரியையும் ‘காக்க வைப்போர்’ பட்டியலிலும், அன்று அலுவலகம் வராதவர்களை காத்திருப்போர் பட்டியலிலும் சேர்த்துக்கொண்டு பதிலளித்தான்.

“ஒரு இநூறு ஆகும் நம்ம கேன்டீன்லயே வாங்கிக்கலாம். மற்றபடி மட்டன். சிக்கன். வெளியில வாங்கிக்கலாம்”

“இந்தாங்க இநூறு”

“நாளைக்கு கொண்டு வாங்க”

“நாளைக்கு லேட்டா வருவேன். ஏ.ஒ.கிட்ட ஒன் அவர் பர்மிஷன் வாங்கிட்டேன். அதனாலதான். லஞ்சுக்கு முன்கூட்டியே ஏற்பாடு செய்யனுமே. வச்சுக்கங்க சார்”

“ஆமா. தெரியாமத்தான் கேட்கறேன் ஏ.இ.கிட்ட பர்மிஷன் கேட்டால் போதுமா? அப்போ அக்கவுண்டன்ட்டான நான் எதுக்கு இருக்கேன்”

"சாரி மேடம். ஒன் அவர் பர்மிஷன் கொடுங்க மேடம்."

மீனாவிடம் பணம் வாங்கிக் கொண்ட முரளி உட்பட எல்லாரும் சிரித்தனர். அக்கவுண்டன்ட் மேடம், அவளை சூடாகப் பார்த்தாள். கிண்டலடிக்கிறாளா... இல்லை... அவள் முகத்தில் எந்த வில்லங்கமும் இருப்பதாய் தெரியல நானும், தனியாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/64&oldid=1372000" இலிருந்து மீள்விக்கப்பட்டது