பக்கம்:ஈச்சம்பாய்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

ஈச்சம்பாய்



கைகளை அப்பியபடி, கால்களை நகர்த்தப்போனார். அதற்குள் காலிங்பெல் ஒலியும், கதவோசையும் விநோதமான ஓசையாய் கேட்பதை உள்ளூறப் பருகினார். "யாரோ வந்திருக்கா. அட கடவுளே! எவ்வளவு நேரமாய்க் காத்துண்டு இருக்காளோ?"

பஞ்சாபகேசன், தமக்கே கேட்காத குரலில் பதறியடித்துச் 'சத்தம்' போட்டார்.

"லட்சுமி, யாரோ வந்திருக்கா, பாரேன். யாரோ வெளில காத்துண்டிருக்கா, ஏய் லட்கமி, லட்சுமீ ஈ...ஈ._.ஈ..."

லட்சுமி மாமிக்கு, கணவர் கூப்பிட்டது கேட்கவில்லை. அடுப்பு வேலையை முடித்துவிட்டு, ஆடைகளைத் துவைத்து விட்டு, வேலை முடிந்த திருப்தியில் கசகசவென்றிருந்த உடம்பில், அருவிபோல் தண்ணீர் படும்போது எவ்வளவு சுகம்! எவ்வளவு குளிர்ச்சி! காலைதோறும் பாத்திரங்களைக் கழுவும்போதும், வீட்டைக் கூட்டும்போதும், 'குளிக்கப் போகிறோம், குளிக்கப் போகிறோம்' என்ற ஆனந்த எதிர்பார்ப்பில் அத்தனை வேலைகளையும் அத்துபடி ாய்ச் செய்து பழக்கப்பட்ட மாமிக்கு, வெளியே ஒலித்த சத்தம், குளியலறைக்குள் ஒலித்த நீர்ச்சத்தம்போல் தோன்றியது. போதாக்குறைக்குத், தன் நெடிய கூந்தலைக் காதுகளை மூடும்படி பரப்பிவிட்டு மாமி நீரில் லயித்துக் கொண்டிருந்தாள்.

பஞ்சாபகேசனால் பொறுக்க முடியவில்லை. கொடியில் கிடந்த ஸிலாக் சட்டையைக் கைப்பற்றிய கையோடு, சுவரில் கைப்பதித்துத் தத்தித் தத்தி நடந்தார். அங்கும் இங்குமாய் ஆடிய தலையைச் சுவரோடு சேர்த்து அழுத்தியபடியே, மெல்ல மெல்ல கால்களை நகர்த்தி நகர்த்தி, கைகளை ஊன்றி ஊன்றி, வரவேற்பறைக்கு வந்தார். பலமான கதவோசையைக் கேட்டுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/72&oldid=1372004" இலிருந்து மீள்விக்கப்பட்டது