பக்கம்:ஈச்சம்பாய்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

ஈச்சம்பாய்


படியாகவா நடந்துக்கிட்டாங்க?... வெறுப்பேத்தினாங்க... காரோட டிரைவர், வீட்டில் இப்போது வேலை பார்ப்பவர்கள், வேலையில் இருந்து நீக்கப்பட்டவர்கள், நின்றவர்கள், வண்டிக்காரர், பேப்பர்க்காரன், ஆவின் பால் போடும் சிறுமி, குப்பை அள்ளும் எக்ஸனோரா பையன், பிளாட்பாரத்தில் தொழில் நடத்தும் செருப்புத் தைக்கும் தொழிலாளி, இஸ்திரி போடும் ஒரு இளவட்டம், காய்கறிக்காரி, பூக்காரி - எல்லாவற்றுக்கும் மேலாக புகார் கொடுத்த இந்த பாக்கியமுத்து அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரிக்க வேண்டும் என்றார்கள். வயிறுகளில் குத்தினால் வாய் உண்மையைக் கக்கும் என்றார்கள். இதற்கு இவரும் உடன்படவில்லை. வாய்மொழி மூலம் கொடுத்த புகாரையும் வாபஸ் வாங்கியாயிற்று... அவர்களிடம் சட்டம் பேசிய பாக்கிய முத்தையும் அடக்கியாயிற்று. காவலர்களுக்கும் ஆட்டோவில் வந்ததற்கும் போனதற்கும் நூறுரூபாய் நோட்டை வேறு கொடுத்தாயிற்று. அப்படியும் பசி அடங்கலன்னா... என்ன நினைச்சிட்டான் இந்தப் போலீஸ்...?’

‘இந்தப் பாக்கியமுத்து எப்பேர்ப்பட்டவன்... இவன் காலுக்கு மட்டுமா செருப்பு... மார்புக்குக் கவசம்... தலைக்குத் தொப்பி... பின்பக்கம் புதர்க்காடாயும் முன்பக்கம் வீடுகளாயும் உள்ள இந்த எரியாவிலே கைப்பம்பு, மோட்டார் செட்டு, சைக்கிள், டாங்கி மூடி, நேரம் கிடைத்தால் வாசல் கேட்டு போன்ற திருடுகள் ஆரம்பத்தில் இரவில் நடந்தது... அதை நாலும் தெரிந்த வீட்டுக்காரர்கள் கண்டுக்காததால் பகலிலும் நடந்தது... இப்படி ஒரு தடவ பாக்கிறதுக்கே பயங்கரமான ஒரு பச்சக்குத்திப்பயல் பக்கத்து வீட்டு கைப்பம்பை கழட்டியபோது அவனைக் கண்டிக்க வேண்டியதாயிற்று. அவனோ.. நாளைக்கு ஒன் வீட்டில் திருடிக்காட்டுறேன் பார் என்று சவால் விட-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/92&oldid=1371890" இலிருந்து மீள்விக்கப்பட்டது