பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

133




3. உரிய வரி கொடுக்காதவர்களிடம் "மண்கலம் தகர்த்து வெண் கலம் பறிக்கும்" செயல்களில் 'தகர்த்து' என்பதற்குப் பதிலாக "தந்து" என்று பொறித்திருப்பது.

4. திங்களூரில் விக்கிரமசோழன் கல்வெட்டும் அறச்சலூரில் வீர வல்லாளன் கல்வெட்டும் கீழிருந்து மேலாக எழுதப்பட்டிருப்பது.

5. சிவப்பிராமணர் வடபரிசார நாட்டிலும் குறுப்பு நாட்டிலும் தங்கள் காணியுரிமைகளில் நாலில் ஒன்று உவச்சர்களுக்குக் கொடுக்க ஆணையிட்டிருப்பது.

6. கி.பி. இரண்டாம் நூற்றாண்டு தமிழ்-பிராமிக் கல்வெட்டில் இசை எழுத்தடைவுகள் பொறித்திருப்பது.

7. திங்களூரில் வீரபாண்டியன் கல்வெட்டில் 'அஃகம்' என்ற சொல்லில் ஆய்த எழுத்துப் பொறித்திருப்பது.

8. சாத்தம்பூரில் குலோத்துங்க சோழன் கல்வெட்டில் தூக்குத் தண்டனை (தலைவிலை) கூடாது என்று பூத்துறை நாட்டார் தீர்மானம் செய்திருப்பது.

9. நடுகல் கல்வெட்டில் பெருமையும் பெயரும் பாடல் வடிவில் பொறித்திருப்பது தென்னிந்தியாவிலேயே ஈரோடு வட்டம் பழமங்கலத்தில்தான்.

'வாய்த்தபுகழ் மங்கலத்து வந்தெதிர்த்த மாற்றலரை
சாய்த்தமருள் வென்ற சயம்பெருக - சீர்த்தபுகழ்
நிக்குவணம் சுற்பொறிக்கப் பட்டான் கரையகுலச்
சொக்கனேந்த லேவுலகில் தாள்"

என்பது அப்பாடல்.

செப்பேடுகள்

கொடை அல்லது ஆணைகளைச் செம்புத் தகட்டில் பொறிக்கப்பட்டால் அதைச் செப்பேடு என்பர். ஈரோடு மாவட்டத்தில் ஈங்கூர்,