பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

ஈரோடு மாவட்ட வரலாறு


ஈரோடு, ஊசிப்பாளையம், கத்தாங்கண்ணி, காடையூர், கூனம்பட்டி, கொளப்பலூர், கோசணம், சென்னிமலை, தாராபுரம், திருவாச்சி, அந்தியூர், தூக்கநாயக்கன்பாளையம், நீலம்பூர், பாகுர், பெருந்துறை, பேரோடு ஆகிய ஊர்களில் செப்பேடுகள் பல கிடைத்துள்ளன.

அவை புலவர் நியமனம், குருக்கள், மடம், காணி பெறுதல், வழக்குகளைத் தீர்த்தல், வெற்றியாளர்களுக்கு விருதுகள். கோயில் நிர்வாகம், வழிபாடு, சமூக ஒற்றுமை, ஊராட்சி முறை, பாளையக்காரர் ஆட்சிமுறை, எல்லைத் தகராறுகள் தீர்ப்பு முதலிய பல்வேறு சமூகச் செய்திகளை விரிவாகக் கூறுகின்றன. செப்பேடுகளை ஒத்த ஓலைப் பட்டயங்கள் மிகுதியாகக் கிடைப்பது ஈரோடு மாவட்டத்தின் சிறப்பாகும். ஓலைப்பட்டயங்கள் ஈரோடு மாவட்டத்தில் அனுமன்பள்ளி, கன்னிவாடி, கூனம்பட்டி, கொடுமணல், சிவகிரி, சின்னியம்பாளையம், தம்மரெட்டிபாளையம், பழையகோட்டை, புதுப்பை முதலிய பல இடங்களில் கிடைத்துள்ளன.

ஆ) ஓலைச்சுவடிகள்

ஈரோடு மாவட்டத்தில் பனைமரங்கள் மிகுதியாக உள்ளன. பனைஓலை எளிமையாக கிடைக்கின்ற காரணத்தால் இங்கு ஓலைச் சுவடிகள் மிகுதி, பரம்பரைப் புலவர்கள் இங்கு மிகுதியாக இருந்த காரணத்தால் அவர்கள் எழுதி வைத்த சுவடிகள் பல அவர்களின் வழியினரால் பாதுகாக்கப்பட்டு வந்தன. உ.வே. சாமிநாதய்யர் இங்கிருந்து பல சுவடிகளைப் பெற்றுக் கொண்டு சென்றுள்ளார். அவை திருவான்மியூர் உ.வே. சாமிநாதய்யர் நூலகத்தில் உள்ளன. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையும், தமிழ்ப்பல்கலைக்கழக ஓலைச் சுவடித்துறையும் பற்பல சுவடிகளைத் தொகுத்துள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி, பவானி, சென்னிமலை, சிவன்மலை. பூந்துறை போன்ற ஊர்களுக்குத் தல புராணங்கள் ஓலைச் சுவடியிலிருந்து அச்சாகியுள்ளன. வீராச்சிமங்கலம் சுந்தராமிப்