பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

24. நினைவுக்கற்கள்


அ) வீரர் நடுகற்கள்

தங்கள் கால்நடைகளைக் காப்பதிலும் பகைவர் கவர்ந்த கால்நடைகளை மீட்பதிலும் ஊரைக்காப்பதிலும் மக்களுக்குத் துன்பம் விளைவித்த கொடிய விலங்குகளைக் கொல்லுவதிலும் கணவனோடு உடன் இறப்பதிலும் செயற்கரிய செயல்புரிவதிலும் உயிர் நீத்தவர்கட்கு நினைவுக்கல் நாட்டுவது பண்டைய வழக்கம். சில நினைவு நடுகற்களில் பெயரும் பெருமையும் பொறிக்கப்பட்டிருக்கும்.

ஈரோடு மாவட்டத்தில்

ஈரோடு வட்டத்தில் அறச்சலூர், சிவகிரி, துக்காச்சி, பழமங்கலம், புறாப்பாளிக்காட்டு வலசு, பெரிய சேமூர், விளக்கேத்தி, குலவிளக்கு ஆகிய ஊர்களிலும், பெருந்துறை வட்டத்தில் ஈங்கூர், காஞ்சிக் கோயில், சென்னிமலை, திங்களூர், பிடாரியூர், வாய்ப்பாடி விசய மங்கலம், வெள்ளோடு ஆகிய ஊர்களிலும், காங்கயம் வட்டத்தில் ஆனூர், காங்கயம், நத்தக்காரையூர் ஆகிய ஊர்களிலும், தாராபுரம் வட்டத்தில் கன்னிவாடி, சங்கரண்டாம்பாளையம் ஆகிய ஊர்களிலும், பவானி வட்டத்தில் அந்தியூர், ஆப்பக்கூடல், ஒலகடம், ஊசிமலை, ஊராட்சிக்கோட்டை, ஒந்தனை, கடை ஈரெட்டி, சம்பை, சாணார் பாளையம், பட்டிலூர், பவானி, பெரியபுலியூர், மயிலம்பாடி, தட்டக் கரை, தாமரைக்கரை. பர்கூர், பெஜ்ஜில்பாளையம், நெல்லூர், வேம்பத்தி ஆகிய ஊர்களிலும், கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் பொல வக்காளிபாளையம், பெருந்தலையூர், தூக்கநாயக்கன்பாளையம், கணக்கம்பாளையம் ஆகிய ஊர்களிலும், சத்தியமங்கலம் வட்டத்தில் அந்தியூர், அரியப்பம்பாளையம், கடம்பூர், காடன அள்ளி, சின்ன குள்ளபாளையம், சோதனாபுரம், பெரிய குள்ளபாளையம், பெரு முகை, பசவணாபுரம் ஆகிய ஊர்களிலும் நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன. அண்மையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் நம்பியூர் அருகே மலையப்பாளையத்தில் ஒரு நடுகல் கண்டறிந்துள்ளார். ஈரோடு கலைமகள் கல்விநிலைய அருங்காட்சியகத்திலும் அரசு