பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

141


அளவுகள்

எண்ணி அளத்தல், நிறுத்து அளத்தல், நீட்டி அளத்தல், முகந்து அளத்தல் என அளவுகள் நான்கு வகைப்படும். இந்நான்கு வகையான அளவுகளுமே ஈரோடு மாவட்டத்தில் வழக்கில் இருந்துள்ளன என்பதை கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் அறிவிக்கின்றன.

எண்ணியளத்தல்

"நூறு வெற்றிலை இருபத்தஞ்சு பாக்கு". "இருபத்தி நாலாயிரம் பொன்", "இருநாறு ஆயிரத்து ஐம்பதாயிரம் பொன்" என்று பல ஆவணங்களில் எண்ணல் அளவு கூறப்படுகிறது.

நிறுத்து அளத்தல்

நிறுத்து அளப்பதில் பொன், வெள்ளி போன்ற உலோகங்களுக்கு ஒரு மாதிரியும் மற்ற பொருட்களுக்கு ஒரு மாதிரியாகவும் அளவு இருந்தது, பொன்னை அளக்க குன்றிமணி, மஞ்சாடி, கழஞ்சு, காணம், பணம், மாடை போன்ற அளவுகள் இருந்தது. அச்சவயல் காணம், மயிற் காணக் கழஞ்சு, அமுதன் அச்சு, சுரிகுழுந்தன் அச்சு என்ற பெயர்களில் அளவுகள் இருந்தன. கழஞ்சு அச்சு என்றும் கூறப்பட்டது. 'பொன்' என்ற அளவு தங்கமும் இருந்துள்ளது. கற்றுளைக் கழஞ்சு, தீப் போக்குச் செம்பொன், ஊராணியோடு ஒக்கும் பொன் என்பன உயர்ந்த வகைப் பொன்னாகும்.

"தேவன் கூத்தப் பெருமாள் 1 அச்சு 4 பணம்; வியாபாரி நம்பி 1 அச்சு 4 பணம்; நம்பியம்மை 1 அச்சு 4 பணம் ஆக 4% அச்சு" என்று கூறுவதால் 10 பணம் 1 அச்சு என்று அறிகின்றோம். காணமும் பணமும் சமமானவை. 'காணம்' என்பது கொள்ளு அளவுள்ள பொன்னாக இருக்கலாம். பலம், துலாம், தூக்கு என்பன பிற நிறுத்தல் அளவுகள் ஆகும். 'கோல்', 'நிறைகோல்' என்று தராசு கூறப்பட்டது.

நீட்டியளத்தல்

கோல், கயிறு என்பன நீட்டியனக்கப்பயன்படுத்தப்பட்டன. கோல் 18 அடி, 12 அடி என்று பலவாறாக இருந்தது. 'அடி' என்பதை