பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

ஈரோடு மாவட்ட வரலாறு


குடிப்பணம் குடியுரிமைக்குச் செலுத்தும் வரி
கூற்றிலக்கை அளவையிடுவோர்க்குக் கொடுக்கும் வரி
சந்தி விக்கிராப் பேறு கோயில் பூசைக்கான வரி
சித்தாயம் முக்கிய வரியைக் குறிக்கும் சொல்
சுங்கம் விற்பனைப் பொருள் கொண்டு செல்ல வரி
செக்கிறை செக்கு வரி
தட்டார்பாட்டம் பொற்கொல்லர் வரி
தட்டொலிப்பட்டம் இசைக்கருவிகள் பயன்படுத்த வரி
தண்ணீர்க் காணம் நீர்ப்பாசன வரி
தறிஇறை தறிக்கு வரி
தறிப்புடவை நெய்யும் சேலைக்கு வரி
திரிசூலவரி எல்லைக்கல் நாட்ட வரி
தோலொட்டு தோல் தொழில் வரி
தத்தவரி குடியிருப்பு மீதான வரி
நல்லெருது கால்நடை வரி (எருது)
நற்பசு கால்நடை வரி (பசு)
நாட்டு வினியோகம் நாட்டுச் சபைக்குச் செலுத்தும் வரி
பலபட்டடை வரி வணிகர்கள் கொடுக்கும் வரி
பாசிப்பாட்டம் மீன் பிடிக்க வரி
பாறைக்காணம் வண்ணர் வரி
மகமை விற்பனையில் கொடைக்குக் கொடுக்கும் பங்கு
வாசல் வினியோகம் தெருவில் வாசல் வைக்கச் செலுத்தும் வரி
வால் வரி கால்நடைகளுக்கு உரிய வரி
வேண்டுகோள் வரி விண்ணப்பம் மீதான வரி

ஈரோடு மாவட்டப் பிற்கால ஆவணங்கள் சில குறவர், கூத்தாடி, சக்கிலியர், தொட்டியர், தொம்பர், பட்டர், பறையர், புலவர், மறவர், மாணிக்கி (தேவரடியார்} வலையர், வேட்கோவர், ஆண்டிகள் ஆகியோருக்கு வரியில்லை என்று கூறுகின்றன.