பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

25. வரி - அளவு - நாணயங்கள்


வரிகள்

நாட்டின் வருவாய் அங்கு வசூலிக்கப்படும் பல்வேறு வரிகள் மூலமே கிடைக்கின்றன.

ஈரோடு மாவட்டக் கல்வெட்டுக்களில் இங்கு வழங்கப்பெற்ற பல்வேறு வரிகள் குறிக்கப் பெறுகின்றன.

அந்தராயம் நிலவரி நீங்கிய சிறு வரி.
ஆராய்ச்சி கோயிற்பணிகளை மேற்பார்வைக்காகச் செலுத்தும் வரி
இறைக்கண்பு கம்பு தானியமாகக் கோயிலுக்குக் கொடுக்கும் வரி
இறைபுரவு அரசுக்குத் தரும் நிலவரி.
ஈழம் புஞ்சை உலோகம் உள்ள நிலத்து வரி, ஈழவர் வரி எனவும் கூறுவர்.
உகவை மகிழ்வான காரியங்களுக்குச் செலுத்தும் வரி
உப்பாயம் உப்புவரி (அரசுக்குத் தரும் வரி)
ஊர் வினியோகம் ஊர்ப்பொதுக்காரியங்களுக்குச் செலுத்தும் வரி
எலவை அமங்கலகாரியத்துக்குச் செலுத்தும் வரி
ஒட்டச்சு அரசுக்குச் செலுத்த உடைமையாளரும் உழுபவரும் ஒப்புக்கொண்ட வரி
ஓலைச் சம்படம் ஓலை எழுதக் கூலி
கடமை செலுத்த வேண்டிய நிலவரி
காணிக்கை கோயில் காணி உரிமையாக செலுத்தும் வரி
கார்த்திகைப்பச்சை கார்த்திகை விளக்குக்குக் கொடுக்கும் வரி
காவல் கூலி காவல் காக்க கொடுக்கும் வரி(பாடி காவல்)
கீழிறை சிறுவரி