பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

153


தடுப்பணை,பெரும்பள்ளம் அணை, மேட்டூர் - காவிரி மேற்குக் கரை வாய்க்கால், வட்டமலைக்கரை அணை, வரட்டுப்பள்ளம் அணை ஆகியவையாகும். முத்தூர்த் தடுப்பணையும் ஒரத்துப்பாளையம் அணையும் பெரும்பகுதி கரூர் மாவட்டத்திற்கே பயன்படுகிறது. ஒரத்துப்பாளையம் அணை சாயக்கழிவு நீரால் மாசுபட்டு பயனற்று விட்டது. அதைத் திருத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது,

பரம்பிகுளம் ஆளியாறு அணையும் அமராவதி அணையும் கோயமுத்தூர் மாவட்டத்தில் இருந்தாலும் ஈரோடு மாவட்டத்தில் பாசனத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. இத்திட்டங்களால் சுமார் 2½ லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. பருவமழை அடிக்கடி ழபொய்ப்பதன் காரணமாக முழு அளவு பாசனம் பெரும்பாலும் நடைபெறுவதில்லை.