பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

28. வேளாண்மை


பண்டைய வேளாண்மை

தொழில்களில் இன்றியமையாதது உழவுத் தொழிலேயாகும். வேட்டைக்கு அடுத்து தோன்றிய தொன்மையான தொழிலும் உழவு தான். ஈரோடு மாவட்டத்தில் உழவுத் தொழில் வரலாற்றுத் தொடக்க காலத்திலேயே சிறந்து விளங்கியதைப் பெருந்துறை வட்டக் கொடுமணல் அகழ்வாராய்ச்சியில் அரிசியும் பிற தானியங்களும் கிடைத்துள்ளதிலிருந்தும் வேளாண்மை இரும்புக் கருவிகள் கிடைத்ததிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம்.

காங்கய நாட்டுப் பகுதியில் ஏர் உழும்போது கொழுமுனையில் மணிகள் கிடைப்பதாகப் பதிற்றுப்பத்துக் கூறுகிறது.

மேலும் 'ஆகெழு' கொங்கு என்று வருணிக்கப்படுவதால் பசுக்களும் காளைகளும் ஏர் உழப் பயன்பட்டிருக்கும் என்பது உறுதி. சங்க காலத்தை அடுத்த இரட்டர், கங்கர் ஆட்சிக்காலத்தில் "கண்டக வீதைப்பாடு நிலம்" என்று கூறப்படுவதால் உழுது, விதைத்துச் சாகுபடி செய்தது புலனாகிறது.

பவானி வட்டம் பிரமதேசத்தில் கி.பி. 9ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியில் "ஸ்ரீ செருக்கழி நாட்டாரால் பணிக்கப்பட்டது. நட்டன் ஏரியும் நட்டன் சிறையும் நட்டன் வாயும் நட்டன் காலும் இவை மக்கள் பேர் அல்லாதார் நச்சுவார் வழி அறுவார் காத்தான் அடி என் தலை மேலது" என்ற கல்வெட்டு முனியப்பன் கோயில் பாறையில் எழுதப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பாசன வசதியைக் குறிக்கும் முதல் கல்வெட்டு இதுவேயாகும்.

பல அணைகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் அமைக்கப்பட்டன. ஆற்றைத்தடுத்துக் கட்டப்படுவது அணை, ஏரி (கரை) அமைத்து உருவாக்கப்படுவது ஏரி. குழித்து (பள்ளம், குழி ஆக்கி) செய்யப்படுவது குளம். தடுத்துக் கட்டப்பட்ட அணை மூலம் கால்வெட்டி