பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

177


பொதிக்கு" "சுங்கம் தீரும் பண்டங்களுக்கு" என்ற தொடர்களால் அறிகின்றோம். குழுக்களில் உள்ள வணிகரிடம் கோவிலைச் சேர்ந்தவர்கள் சென்று அவர்கள் அளிக்க ஒப்புக்கொண்ட மகமை வரியை வகுல் செய்துள்ளனர். இதை

"எல்லா வட்டைகளிலும் வைராகிகளும் சமயக்
கணக்கணும் தண்டிப் புகுந்த முதல்"

என்ற தொடர் விளக்குகிறது.

சில வணிகர்கள் கோயில் திருமடை வளாகத்தில் குடியிருந்துள்ளனர். "திருமடை வளாகத்தில் தெற்கில் தெருவிலிருக்கும் தோயா வஸ்திரச் செட்டிகளில் பாளைநல்லூர் உடையான் வேதநாயகன் செட்டியாழ்வானான சேரமான் தோழளன" என்பது சர்க்கார் பெரியபாளையம் கல்வெட்டு.

பிற்கால வணிகம்

17, 18ஆம் நூற்றாண்டுகளில் ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் காவேரிபுரம் வழியாகவும் கண்டஹள்ளி வழியாகவும் கர்நாடகப் பகுதிகளுக்குப் பல பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. 1800ஆம் ஆண்டு காவேரிபுரத்திலிருந்து இரு மாதங்களில் கொண்டு செல்லப்பட்ட பொருள்களின் மதிப்பை புக்கானன் சுங்கச் சாவடிக் குறிப்பில் பார்த்து எழுதியுள்ளார். அவை

புகையிலை 300 எருத்துப் பொதி
நெய் 70 எருத்துப் பொதி
துணி 50 எருத்துப் பொதி
பனைவெல்லம் 50 எருத்துப் பொதி
விளக்கெண்ணெய் 10 எருத்துப் பொதி
கசகச 5 எருத்துப் பொதி
கோணி 5 எருத்துப் பொதி
பாத்திரங்கள் 5 எருத்துப் பொதி ஆகும்

ஐதர்அலி காலத்தில் (1770) இதைவிட 10 மடங்கு சென்றது என்று அவர் கூறுகிறார். தினமும் 40 முதல் 50 எருத்துப் பொதிகள் சென்றதைத்