பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

ஈரோடு மாவட்ட வரலாறு


தாமே கண்டதாகக் கூறுகிறார் கண்டஹள்ளியிலும் இவையன்றி அரிசியும் உப்பும் சென்றதாகக் கூறுகிறார்.

இன்றைய வணிகம்

ஈரோடு மாவட்ட வாணிகத்தில் இன்று மிகச் சிறந்து விளங்குகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக ஏற்றுமதியில் தமிழகத்தில் இரண்டாவது நகரமாக விளங்குகிறது. ஆண்டுதோறும் ஈரோட்டிலிருந்து 10 ஆயிரம் போடி ரூபாய்க்கு மேல் மதிப்புடைய பல பொருட்கள் ஏற்றுமதியாவதாக அரசு அறிக்கை கூறுகிறது.

ஜவுளி

கைத்தறி, விசைத்தறியில் உற்பத்தியாகும் பல்வேறுபட்ட துணிவகைகள், உள்ளாடை, ஆயத்த ஆடை, நூல், படுக்கை விரிப்பு, ஜமுக்காளம், கால்மிதிகள், லுங்கி. துண்டுகள் ஏற்றுமதியாகின்றன. திருப்பூரில் தயாராகும் சிறப்புமிக்க பல்வேறு வகையான உள்ளாடை வகைகள் அங்கிருந்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டாலும் உள்நாட்டுத் தேவைகளுக்கு ஈரோடு வழியாகவே ஏற்றுமதியாகிறது. ஈரோடு மாவட்டத்தில் உற்பத்தியாகும் ஜவுளி வகைகள் மட்டும் அல்ல. அண்டை மாவட்டங்கள், அண்டை மாநில ரகங்களுக்கும் ஈரோடே விற்பனைச் சந்தையாக விளங்குகிறது. கதர், சுதர்பட்டு. கம்பளி, நெசவுப் பொருட்களும் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

எண்ணெய்

எண்ணெய் வகைகள் ஏற்றுமதியில் ஈரோடு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. எண்ணெய் வித்துக்களும் நேரடியாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தேங்காயெண்ணெய், கடலெண்ணெய், நல்லெண்ணெய் முக்கிய ஏற்றுமதி எண்ணெய்களாகும். பல நிறுவனங்கள் இவைகளைச் சில்லறை விற்பனைக்கும் பல அளவுகளில் பைகளில் அடைத்து அனுப்புகின்றன. காங்கயம், வெள்ளகோயிலிலும் பிற இடங்களிலும் ஏறக்குறைய 100 எண்ணெய் ஆலைகள்