பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

179


உள்ளன. எஸ்கேஎம் நிறுவனத்தினர் அரிசித் தவிட்டிலிருந்து சமையல் எண்ணெய் (பூர்ணா) தயார் செய்கின்றனர்.

மஞ்சள்

தமிழகத்திலேயே மிகப் பெரிய அளவில் மஞ்சள் ஏற்றுமதி ஈரோடு மாவட்டத்திலேயே நடைபெறுகிறது. டிசம்பரில் மஞ்சள் வரத்துத் தொடங்கும். முதலில் மைசூர், கொள்ளேகால், சாம்ராஜ் நகர் உள்ளிட்ட இடங்களிலிருந்து மஞ்சள் வரத் தொடங்கும். ஈரோடு மாவட்ட மஞ்சளோடு நாமக்கல், சேலம், தருமபுரி, திருவண்ணாமலை மஞ்சளும் ஈரோடு வழியாகவே ஏற்றுமதியாகிறது. ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், ஈரோடு கூட்டுறவு விற்பனை மையம், வெளி மார்க்கெட் மூலம் மஞ்சள் விற்பனையாகிறது. நூற்றுக்கணக்காள தரகு மண்டிகளும் தனிப்பட்டவர் குடோன்களும் உள்ளன. பல இலட்சக் கணக்கான மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டு விலையேற்றத்தின்போது விற்கப்படுகின்றன. சிலர் மஞ்சள் தூளையும் பல அளவுள்ள பைகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

பால்

ஈரோடு மாவட்டத்தில் 755 கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர் சங்கங்கள் இணைந்து ஒன்றியம் ஒன்றை 7.2.1975 அன்று தொடங்கினர். 1.7,1976இல் பால் உற்பத்தியும் விற்பனையும் தொடங்கியது. 722 சங்கங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 210000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. உள்ளுர் விற்பனைக்கு 56000 லிட்டர், சென்னைக்கு 45000 லிட்டர் (கொழுப்புச் சத்துள்ள எருமைப்பால், கொழுப்பு நீங்கிய பால்), பதப்படுத்தப்பட்ட எருமைப்பால் 15000 லிட்டர் நாள்தோறும் அனுப்பப்படுகிறது.

டில்லியில் உள்ள மதர் டைரிக்கு திடப்படுத்தப்பட்ட பால் டேங்கர் வழியாக வாரம் நான்கு முறை 42000 லிட்டர் அனுப்பப்படுகிறது. ஒன்றியத்தில் குச்சி வடிவிலும், தூள்வடிவிலும் கால்நடைத் தீவனம் நாள் ஒன்றுக்கு 35 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. வெண்ணெய், நெய், மோர், கொழுப்பு