பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

181


தோல்

உள்ளூர்ச்சந்தைகள் மூலமாகவும் வெளி மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் உப்புத் தோல்கள் எனப்படும் கச்சாத் தோல்களைக் கொள்முதல் செய்து, கலர் தோலாகவும் குரோம் தோலாகவும் பதப்படுத்தி தோல் பொருள் செய்ய சென்னை, ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய இடங்களுக்கும் வடமாநிலங்களுக்கும் பிறமாநிலங்களுக்கும் அனுப்புகின்றனர். 40 தோல் பதனிடும் தொழிற்சாலைகள் அக்கிரகாரம் பகுதியில் உள்ளன. ஆண்டுக்கு 700 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தோல் பொருட்களும் தயார் செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவை ரஷ்யா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, சீனா, கொரியா, இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.

சர்க்கரை

1964இல் தொடங்கப்பட்ட ஆப்பக்கூடல் சக்தி சர்க்கரை ஆலையும் 1986இல் தொடங்கப்பட்ட பண்ணாரியம்மன் சர்க்கரை ஆலையும் முறையே 7500 டன், 2500 டன் கரும்பை தாள்தோறும் அறவை செய்கிறது. இங்கு எரிசாராயம், மின்சாரம், எத்தனால் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன. இரு ஆலைகளும் தங்கள் பயன்பாட்டிற்குப் போக மீதி மின்சாரத்தை தமிழக மின் வாரியத்திற்கு அளிக்கின்றன. மொடக்குறிச்சி அருகே 120 கோடியில் இரண்டாவது சக்தி சர்க்கரை ஆலை ஒன்று உருவாகி வருகிறது. பண்ணாரி சர்க்கரை ஆலை ஆமணக்கு மூலம் பயோடீசல் உற்பத்தியை அண்மையில் தொடங்கியுள்ளது.

பல விவசாயிகள், பிறர் தனிப்பட்ட முறையில் கரும்புச் சர்க்கரை, வெல்லம், அச்சு வெல்லம், உருண்டை வெல்லம், வெல்லத்தூள் ஆகியவைகளை உற்பத்தி செய்கின்றனர். ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களிலும் கவுந்தப்பாடியில் பல குடோன் வசதியோடு இயங்கும் சர்க்கரைச் சந்தையிலும் இவைகளை விற்கின்றனர்.

குன்னத்தூரிலும் பெருந்துறையிலும் பதனீர் மூலம் கருப்பட்டி உற்பத்தி செய்யப்படுகிறது. ஏற்றுமதி செய்யப்படும் கருப்பட்டி