பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

ஈரோடு மாவட்ட வரலாறு


ஸ்பிரிட் செய்ய, சாக்லெட் தயாரிக்க மற்றும் உணவுப்பொருளாகப் பயன்படுகிறது. புகழ்பெற்ற பாரி கம்பெளி கூட குன்னத்தூர் கருப்பட்டியை கொள்முதல் செய்கிறது.

கல் விற்பனை

உயர்ந்த கருங்கற்களையும், பசுமை நிறம் படர்ந்த கற்களையும் மெருகூட்டி வெளிநாடுகட்குப் (ஐரோப்பாகண்டம், அமெரிக்கா, ஜப்பான்) கட்டிடங்களுக்கும் நினைவுச்சிள்ளங்களுக்கும் பயன்படுத்தும் அழகுக்கல் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் 20 தொழிற்சாலைகள் ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் திண்டிவனம் பகுதிகளிலிருந்தும் கர்னாடகா, ஒரிசா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம் போன்ற பகுதிகளிலிருந்து இங்கு கற்கள் வரவழைக்கப்பட்டு மெருகூட்டி அனுப்பப் பெறுகின்றன.

கட்டிடங்களுக்குத் தேவையான கற்களையும் ஜல்லி வகைகளையும் உள்ளூர்க் கற்களைக் கொண்டு தயார் செய்கின்றனர். ஊத்துக்குளி வட்டாரக் கற்கள் மிகவும் சிறந்தவை.

கருங்கற்களையும், வெண்மை படர்ந்த கருங்கற்களையும் மாவு அரைக்கும் இயந்திரங்களுக்குப் பொருத்தி இயந்திரம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் 20 உள்ளன. சௌபாக்யா, அமிர்தா, சுகுணா போன்றவை நாடு தழுவிய விற்பனையைப் பெற்றுள்ளது. பழைய முறையில் கையால் இயக்கும் அம்மி, ஆட்டுக்கற்களும் சிறுபான்மை செய்யப்படுகின்றன.

அழகான கட்டிடங்களுக்கும் தொழிற்சாலைகட்கும் பயன்படுத்தும் சலவைக் கற்களை (Marbie) மத்தியப் பிரதேசம், உதய்ப்பூர், ராஜஸ்தான், பரோடா, ராஜ்நகர், மகரானா போன்ற பிற மாநிலங்களிலிருந்தும் இத்தாலியிலிருந்தும் வரவழைத்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் 20 இம்மாவட்டத்தில் உள்ளன. பயிருக்கு உரமும், கால்நடைகட்குத் தீவனமும் பலரால் தயாரிக்கப்படுகிறது.