பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194

ஈரோடு மாவட்ட வரலாறு


புலவர் சி. கமாலுதீன், கொற்றனூர் க. பழனிசாமிப்புலவர், புலவர் மு. பழனிசாமி ஆகியோர் சிறந்த தமிழ்ப்பணியாற்றி மறைந்தவர்களில் சிலர்.

சாகித்திய அகாடமி விருதுபெற்ற ஈரோடு தமிழன்பன், புலவர் செ.இராசு, புலவர் இரா. வடிவேலு, டாக்டர். வெ. ஜீவானந்தம். ஸ்டாலின் குணசேகரன், மு. சதாசிவம், சேலம் பாலன், குறிஞ்சி சண்முகசுந்தரம், நாமக்கல் நாதன், சந்திரசேகரன், தாராபுரம் சு. அரங்கசாமி; தமிழ்க்குமரன், கோபிசெட்டிபாளையம் கா. அரங்கசாமி முனைவர் மகூடீசுவரன், பெருந்துறை வேலன், சந்திரா மனோகரன், கொங்கு என். கொளந்தசாமி, செ.சு. பழனிசாமி, சு.ஆ. திருஞான சம்பந்தம், கு, ஜமால் முகமது, கே.வி. சுப்பிரமணியம், மே.து. ராசுகுமார், பவானி மழைமகன், ஆற்றலரசு ஆகிய ஈரோடு மாவட்டத்துக்காரர்கள் பலர் பல்வேறு துறைகளில் தமிழ்ப்பணி ஆற்றி வருகின்றனர். புலவர் செ. இராசு கல்வெட்டு, செப்பேடு, சுவடி ஆய்விலும் ஈடுபட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் வார, மாதம் பருவ இதழ்களாக வெளி வந்தவை, வெளிவருபவை மொத்தம் 70 என்பது வியப்பைத் தரும் செய்தியாகும். தந்தை பெரியார் 1930ல் 'குடியரசுப் பதிப்பகம்' தொடங்கி 185 நூல்கள் வெளியிட்டார். (பெரியார் நூல் 114; பிறர் நூல் 71). 1932ல் சாத்தான்குளம் அ. ராகவன் 'பகுத்தறிவு நூல் பதிப்புக் கழகம்' மூலமும், 1944ல் ப. சண்முக வேலாயுதம் 'புதுமை முத்தமிழ்ப் புத்தக நிலையம்' மூலமும், 1943ல் ஆர். லூர்துசாமி 'செலக்ட் புக் ஸ்டால்' மூலமும் பல நூல்களை வெளியிட்டனர். இவர் வெளியிட்ட ஒரு நூல் 'திருவாரூர் முரசொலி எழுத்தாளர் மு. கருணாநிதி' எழுதிய கவிதையல்ல' என்பது. வேலாயுதம், ஈ.வே. இராசமாணிக்கம் ஆகியோர் ஈரோட்டில் நடத்திய சிவலிங்கம் நூற்பதிப்புக் கழகம், வேலா பதிப்பகம் ஆகியவை பல தமிழ் நூல்களை வெளியிட்டன. நூறாண்டுகட்கு முன்னரே நிந்திய கல்யாண சுந்தரம் அச்சுக்கூடம், சகலகலா நிலைய அச்சுக்கூடம், உண்மை விளக்கம் அச்சுக்கூடம், வாணி விலாஸ் பிரஸ், சென்ட்ரல், ஸ்டார் அச்சுக்கூடங்கள் பல நூல்களைப் பதிப்பித்தன.