பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

36. மகளிர் மாண்பு


ஈரோடு மாவட்டப் பகுதியில் வாழ்ந்த பெண்களில் பலர் சமயத் தொண்டு புரிந்தவர்களாகவும் தமிழும், வடமொழியும் சுற்றறிந்தவர்களாகவும் புலமை நலம் வாய்ந்தவர்களாகவும் நியாயம் தீர்க்கும் நீதிபதிகளாகவும் அரசு அலுவலர்களாகவும் குடும்பத்தில் ஏற்பட்ட இடையூறுகளை எதிர்த்துப் போராடியவர்களாவும் இருந்துள்ளனர்.

பக்தி பிடித்த சடைச்சியம்மாள்

சிவமலை பட்டாலியில் கொங்கு வேளாளர்களில் கண்ண குலத்தில் ஒரு பெண் பிறந்தாள். வள்ளி என்று பெயர் வைத்தனர். இளமையிலேயே சிவமலையாண்டவர் மீது பெரும் பக்தியுடன் அவள் விளங்கினாள். சடா முடியுடன் தவக்கோலத்தில் இருந்த அப்பெண்ணை எல்லோரும் 'சடைச்சி' என்றே அழைத்தனர்.

யாத்ரீகர்களுக்குத் தண்ணீர்ப்பந்தல் வைத்து எப்பொழுதும் உப்பு, ஊறுகாய், நீராகாரம் கொடுக்க ஏற்பாடு செய்தான், சிவன் மலைக்கு பக்தர்கள் எளிமையாக மலை ஏறப் பல இடங்களில் படிகள் அமைத்தான், மலையின் வடபுறம் கிணறு வெட்டி நந்தவளம் அமைந்து நாள்தோறும் முருகப்பெருமானுக்குப் பூமாலை சாத்த ஏற்பாடு செய்தாள். பக்தர்கட்குப் பல வசதிகள் செய்து கொடுத்தாள்.

இறுதியில் சிவமலையாண்டவருடன் சடைச்சி ஐக்கியம் ஆனாள் என்பர். பக்தர்கள் சடைச்சி உருவத்தை சிவமலையாண்டவர் சன்னதியிலேயே எழுந்தருளச் செய்தனர். இதனை மடவளாகம் இலட்சுமண பாரதியார் சிவமலைக் குறுவஞ்சியில்

"பக்திபிடித்த சடைச்சி யம்மாளைத் - தன்
பாதங்களில் வைத்த சிவமலை யாண்டவர்"

என்று பாடியுள்ளார்.