பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

37. மருத்துவம்


ஈரோடு மாவட்ட மருத்துவ வரலாறு மிகவும் தொன்மையானது. இம்மாவட்டத்தில் சித்தர்கள் கண்டுபிடித்துப் பயன்படுத்திய சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி மருத்துவ முறைகள் வழக்கில் உள்ளன. பொதுவாக மக்கள் இம் மருத்துவத்தை 'நாட்டு மருத்துவம்' என்று அழைத்தனர்.

முன்பு தக்க விழிப்புணர்வு இல்லாததாலும் தகுந்த மருந்துகள் இல்லாததாலும் நோய்களினால் இறப்பு விகிதம் மிக அதிகமாக இருந்தது. கோவை மாவட்டத்தில்

காலரா - இறப்பு விகிதம்

 ஆண்டு இறந்தோர்
 1875 - 14220
 1876 - 26933
 1877 - 12528
 1951 - 131


இப்போது பெரும்பாலும் இல்லை.
பிளேக்

 1921 4123
 1923 - 3886
 1943 - 4295
 1949 - 7
 1950 - 1

அம்மை

 1882 - 2075
 1892 - 2676
 1927 - 1173
 1956
 1957
1958
309