பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

38. போக்குவரத்தும் தகவல் தொடர்பும்


சாலைப் போக்குவரத்து

கி.பி. 7ஆம் நூற்றாண்டு ஈரோடு மாவட்ட இலக்கியமான பெருங்கதை 'நாட்டுப் பெருவழி', 'காட்டுப் பெருவழி' என்ற இரண்டைக் கூறுகிறது. இடைக்காலத்தில் பாலக்காட்டுக் கணவாயிலிருந்து கரூர் நோக்கிச் சென்ற 'இராசகேசரிப் பெருவழி' 'கொங்குப் பெருவழி' கூறப்படுகிறது. அது கரூர் - காங்கயம் வழியாகச் சென்றது.

தாராபுரம், காங்கயம், ஈரோடு, பவானியை இணைக்க "கொங்கு குலவல்லி வழி" இருந்தது. தாராபுரம் - கரூருக்கு இரண்டு வழிகள் இருந்தன. அவை தளவாய்ப்பட்டணம், காரத்தொழு வழியாகச் சென்ற "காரித்துறைப் பெருவழி" மற்றும் கன்னிவாடி, மூலனூர் வழியாகச் சென்ற "பாலப் பெருவழி"யாகும்.

நாயக்கர், மைசூர் உடையார் காலங்களில் ஈரோடு மாவட்டத்திலிருந்து கர்நாடகம் செல்ல காவேரிபுரம் வழியாகவும், பர்கூர் வழியாகவும். திம்பம் வழியாகவும் மொத்தம் மூன்று பாதைகள் இருந்தன. டணாயக்கன் கோட்டையிலிருந்து இராணுவம் செல்ல ஒரு பாதை இருந்தது. அது பிற்காலத்தில் "கல்தான் வழி" எனப்பட்டது. காவேரிபுரம் வழி மேட்டூர் அணையில் மூழ்கி விட்டது.

பிற்காலத்தில் முருங்கத்தொழுக் கல்வெட்டில் அறச்சலூர் வழியும் வெள்ளோட்டு வழியும், வெள்ளோட்டுக் கல்வெட்டில் ஈரோடு வழியும், நசியனூர்க் கல்வெட்டில் திண்டல் இட்டேரியும் குறிக்கப்படுகின்றன. இட்டேரியைச் சில கல்வெட்டுக்கள் இட்டல் என்றும் அழைக்கின்றன.

1800இல் கும்பினியாட்சி ஏற்பட்டவுடன் சாலைகள் மூன்று பிரிவுகளாக நிர்வகிக்கப்பட்டன. அவை மராமத்து ரோடுகள். நீண்ட ரோடுகள், இராணுவ ரோடுகள் எனப்பட்டன. பின்னர் பொதுப்பணித்துறையே சாலைகளை நிர்வகித்தது. நிலவரியில் சாலை பராமரிப்புக்கு