பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222

ஈரோடு மாவட்ட வரலாறு


வாகனங்கள்

ஈரோடு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் வணிகப் பயன்பாடு - 424290 வாகளங்கள், வணிகம் அல்லாப் பயன்பாடு - 488406 வாகனங்கள் என நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது.

இரயில் போக்குவரத்து

சங்ககிரி - போத்தனூர் இரயில் ஈரோடு வழியாக 12.5.1862 முதல் விடப்பட்டது. ஈரோடு - திருச்சி ரயில் கொடுமுடி வழியாக 1.1.1868 முதல் விடப்பட்டது. போத்தனூர் இரயிலை “தென்னிந்திய ரயில்வே கம்பெனி" (SIR) இயக்கியது. திருச்சி இரயிலை "மெட்ராஸ் ரயில்வே கம்பெனி" இயக்கியது.

இரண்டும் அகலப்பாதையாக இருந்தன. 1879இல் திருச்சிப் பாதை குறுகிய பாதையாக மாற்றப்பட்டு 1929இல் மீண்டும் அகலப் பாதை ஆக்கப்பட்டது, மெட்ராஸ் இரயில்வே கம்பெனியை தென்னிந்திய இரயில்வே கம்பெனி விலைக்கு வாங்கிவிட்டது. 1945ஆம் ஆண்டு இந்திய அரசு தென்னிந்திய இரயில்வே கம்பெனியை ரூபாய் 1646703க்கு விலைக்கு வாங்கி 'தென்னக இரயில்வே' என்று பெயரிட்டது, அப்போது 'திராவிடன் இரயில்வே' என்று பெயரிட வேண்டும் என்று தந்தை பெரியார் போராடினார்.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை தவிர தாராபுரம். காங்கயம், பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய 5 வட்டங்களில் இரயில்பாதையோ இரயில் போக்குவரத்தோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஈரோடு மாவட்டத்தில் 11 இரயில் நிலையங்களும் 90 கிலோ மீட்டர் தூரம் இரயில் பாதையும் உள்ளன. சென்னை - கோவை இரயில்பாதை ஈரோடு வழியாக இரட்டைப் பாதையாக உள்ளது.

இக் குறையைப் போக்க மேட்டூர் - சத்தியமங்கலம் இரயில் பாதையும், ஈரோடு - நஞ்சன்கூடு இரயில்பாதையும் சாம்ராஜ் நகர், சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பழனி இரயில் பாதையும்