பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228

ஈரோடு மாவட்ட வரலாறு


விசாரணைக்காக குற்றம் சாட்டப்பட்டவர்களை அடைத்து னவ்ககும் இடம் "லாக்-அப்" என்று கூறப்படும். ஈரோடு மாவட்டத்தில் ஏழு கிளைச் சிறைச்சாலைகள் உள்ளன. முக்கிய கைதிகளையும் இடம் இல்லாவிடினும் மற்ற கைதிகளையும் கோவை மத்திய சிறைக்கு அனுப்புவர். இப்போது மகளிர் காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தனியாக "அனைத்து மகளிர் காவல் நிலையமும்" உண்டு. போக்குவரத்து, மதுவிலக்கு, இலஞ்சம் இவைகளைக் கண்காணிக்கத் தனிப்பட்ட காவலர்களும் உண்டு.

காவலர். தலைமைக் காவலர், உதவி ஆய்வர், ஆய்வர், மாவட்டத் துணைக் காவல் தலைவர். மாவட்டக் காவல் தலைவர் என்ற நிலையில் மாவட்டக் காவலர்கள் இயங்குகின்றனர். காவலர் ஒருவரே காவல் நிலைய எழுத்தராகப் பணிபுரிவார். காவலர்கள் நடந்து கொள்ள வேண்டிய விதிமுறைகளும் சட்டத்தில் உண்டு.

பலதார மணம் கூடாது. குழந்தைத் திருமணம் கூடாது, கோயிலில் பலியிடுதல் கூடாது, சிறுவர்களைப் பணிக்கு அமர்த்தக் கூடாது, சாதியைக் கூறி இழிவுபடுத்தக் கூடாது, வரதட்சணை கேட்கக் கூடாது, லஞ்சம் வாங்கக் கூடாது. இலஞ்சம் கொடுக்கக் கூடாது. பொது இடத்தில் மற்றவர்களுக்கு இடையூறு செய்யும் செயல்களைச் செய்யக் கூடாது. அனுமதியின்றி ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்தக் கூடாது, வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் ஏற்றக் கூடாது. அனுமதியில்லாமல் துப்பாக்கி வைத்துக் கொள்ளக் கூடாது, பொய்க்கையெழுத்துப் போடக் கூடாது, அரசு அதிகாரிகள் பணிக்கு இடையூறு செய்யக் கூடாது. கோயிலில் பொது இடங்களில் குடிநீர் ஆதாரங்களில் தாழ்த்தப்பட்டவர் உரிமையை மறுக்கக் கூடாது, வரி ஏய்ப்புச் செய்யக்கூடாது. வருமானத்திற்கு மேல் சொத்து சேர்க்கக் கூடாது என்று பல்வேறு வகைப்பட்ட சட்டங்கள் உள்ளன. போக்கு வரத்து விதிகளை மீறுவதும் குற்றமாகும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் தவிர மாநிலச் சட்டமன்றம் தேவையான சட்டங்களை இயற்றிக் கொள்ளலாம். இந்திய அரசிய-