பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

229


லமைப்புச் சட்டத்தில் பாராளுமன்றம் வேண்டிய திருத்தங்களைச் செய்து கொள்ளலாம். அதற்கு மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு வேண்டும். இதுபோல் வேண்டுமான புதுச் சட்டங்களையும் இயற்றிக் கொள்ளலாம். மாநிலம் இயற்றும் சட்டங்கள் மாநில எல்லைக்குள் மட்டுமே அமுலாகும்.

ஈரோட்டில் முன்பு 'கச்சேரி' என்று 'கோர்ட்' அழைக்கபட்டது. இன்றும் கச்சேரி வீதி என்று அவ்வீதி வழங்கப்படுகிறது. ஈரோடு நகரில் வழக்குகளை விசாரிக்கப் பல்வேறு நீதிமன்றங்கள் உள்ளன.

1) மாவட்டத் தலைமை நீதிமன்றம்
2) கூடுதல் மாவட்டத் தலைமை நீதிமன்றம்
3) குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1, 2, 3
4) தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்
5) விரைவு நீதிமன்றம்
8) சார்பு நீதிமன்றம்
7) கூடுதல் சார்பு நீதிமன்றம் I
8) கூடுதல் சார்பு நீதிமன்றம் II
9) நுகர்வோர் நீதிமன்றம்
10) தொழிலாளர் நல நீதிமன்றம்
11) மக்கள் நீதிமன்றம்
12) உரிமையியல் நீதிமன்றம்
13) கூடுதல் உரிமையியல் நீதிமன்றம் I
14) கூடுதல் உரிமையியல் நீதிமன்றம் II

சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பவானி, பெருந்துறை, காங்கயம், தாராபுரம், கொடுமுடி ஆகிய இடங்களிலும் நீதிமன்றங்கள் உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் ஏறக்குறைய 1500 வழக்கறிஞர்கள் உள்ளனர். வழக்கறிஞர் சங்கங்கள் இரண்டு உள்ளன. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பலர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். பலர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களாகப் பணி புரிகின்றனர்.