பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

40. மக்கள்


"ஒரு நாடு வளமுள்ள நாடாக இருந்தாலும் காடாக இருந்தாலும் மேடாக இருந்தாலும் பள்ளமாக இருந்தாலும் மக்கள் நல்லவர்களாக இருத்தல் வேண்டும். அதுவே நல்ல நாட்டுக்கு அடையாளம்" என்று சங்கப்புலவர் அவ்வையார் பாடினார். அதுபோல ஈரோடு மாவட்ட மக்கள் மனித சமூதாயம் தொடங்கிய நாளிலிருந்து நல்லவர்களாக, வல்லவர்களாக வாழ்ந்து மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் வாழ்ந்துள்ளனர்.

தளரா ஊக்கம் உடையவர்களாக, உழைக்கும் ஆற்றலும் புதுமை கண்டறியும் திறனும் உள்ளவர்களாக, பிறரை வாழ்வித்து தாமும் வாழும் தாராள சிந்தை உடையவர்களாக இம்மாவட்ட மக்கள் இருந்துள்ளனர். குழுவாக ஒன்று கூடி நாட்டுச் சபை அமைத்து, எல்லாச் சமூகத்தவர்களையும் அரவணைத்து, வந்தாரை வாழவைத்து, அன்பு காட்டி சகோதர பாசத்துடன் என்னும் இருப்பவர்கள் ஈரோடு மாவட்ட மக்கள்.

கங்கர், போசளர், விசயநகர அரசர், நாயக்கர்கள், மைசூர் உடையாரும் ஆண்டு இம்மாவட்டத்தை விட்டு அகன்றாலும் அவர்கள் காலத்தில் குடியேறிய மக்களைத் தங்களுள் ஒருவராகவே மதித்து இருக்கச் செய்தவர்கள் இம்மாவட்ட மக்கள். தமிழக வடக்கு எல்லையாக அங்கிருந்து வரும் முப்பெரும் கணவாய் வழிகளையும் மேற்கு எல்லையில் இரண்டு கணவாய்களையும் கொங்கு நாடு பெற்றிருப்பதால் ஈரோடு மாவட்ட மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பிற மொழியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

ஆளும் பேரரசர்கள் இப்பகுதியில் எவரும் இல்லையானாலும் 'தல சுய ஆட்சி முறையாக' சிறுசிறு நாட்டவைகளே நிர்வாகம் செய்யும் அரிய முறை இந்த மாவட்டத்துக்கே உரியதாக இருந்தது. சோழர், பாண்டியர், போசளர், விசயநகரப் பேரரசு கோலோச்சிய போது