பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

239


நாடார்

நாடாழ்வார், சான்றார், முகப்பர் என்ற சிறப்புப் பெயர்களே இவர்களின் நாடார், சாணார், மூப்பர் என்ற பெயராயின. பிற்காலத்து மரமேறும் தொழில் புரிந்தனர். பூந்துறை, கருமாபுரம், பெருந்துறை போன்ற இடங்களில் நாடார் மடங்கள் உள்ளன. குல குருவும் உள்ளனர். ஈழமும், இலங்கையும் கொண்டவர்கள் போன்ற பல சிறப்புக்கள் இவர்களுக்கு உண்டு. 'வெள்ளைக் குடையும்' "வெண் சாமரமும் உடையவர்கள்" என்று கோசணம் செப்பேடு கூறுகிறது.

சிவபிராமணர்

சோழர் காலத்தில் சோழநாட்டிலிருந்து சோழர்களால் கொங்கு நாட்டில் குடியேற்றப்பட்டுக் கோயில் காணி பெற்றவர்கள். கொங்குச் சோழர்கள், கொங்குப் பாண்டியர் காலத்தில் இவர்கள் கொங்குக் கோயில்களில் உரிமையாளர்களாக விளங்கினர். கொங்குச் சமுதாயங்களுக்கு குருக்களாகவும் திருமடங்களின் தலைவர்களாகவும் விளங்கினர். இன்றும் இவ்வழக்கம் மறையாமல் உள்ளது.

வணிகர்கள்

ஐநூற்றுவர், பனிரண்டார். நகரத்தார், வைசியர். 24 மனையார், தேவாங்கர், கொங்குச்செட்டி போன்ற பலபிரிவினர் இவர்களுக்குள் உண்டு. தலைச்சுமை, எருத்துப் பொதி, அங்காடி, சந்தை ஆகியன மூலம் வணிகம் செய்தனர்.

கம்மானர்

விசுவகர்மா என அழைக்கப்படும் இவர்கள் தட்டார், கொல்லர், கன்னார், தச்சர், சிற்பியர் என ஐவகைப் பிரிவினர். "பஞ்சகம் மாளர்" என அழைக்கப்படுவர். ஆசாரி என்ற பொதுப்பெயரும் உண்டு (ஆச்சாரி). இவர்கள் பத்துவகையான கோயில் பணி செய்து 'தச்சாசாரிய’க் காணிகள் பெற்றுள்ளனர். (தசக்கிரியை), கோயில் கட்டுதல், அணை கட்டுதல், உழவு கருவிகள் செய்தல் ஆகிய முக்கியத்துவத்தால்