பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

42. ஈரோடு மாவட்டத்தின்
இணையற்ற சிறப்புக்கள்



1. இருபது இலட்சம் ஆண்டுகட்கு முற்பட்ட தொல்லுயிரி எச்சங்கள் (FOSSILS) காணப்படுவது.

2. 2000 ஆண்டுகட்கு முற்பட்ட பெருங்கற்படைச் சின்னங்கள் மிக அதிகமாகக் காணப்படுவது.

3. கி.மு. 3ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் முதன் முதலில் சமணம் புகுந்தது.

4. தொல்காப்பிய விதிக்கும் இசைக்கலைக்கும் வட்டெழுத்துத் தோற்றத்திற்கும் சான்றான கி.பி.2ஆம் நூற்றாண்டு அறச்சலூர். தமிழ் பிராமி கல்வெட்டு இருப்பது.

5. சங்க காலத்தில் கால்நடைச் செல்வம் மிகுதியாக இருந்தது.

6. வண்ணக் கல்மணிகள் உருவாக்கியது. உரோமானியர்கள் வாங்கிச் சென்றது.

7. பிளினி பாராட்டியுள்ள கொங்கு நாட்டின் வைரச் சுரங்கம் இருந்த படியூர் இருப்பது.

8. தமிழில் முதல் மொழி பெயர்ப்புக் காப்பியம் பெருங்கதை உருவானது.

9. விசயமங்கலத்தில் தமிழ்ச்சங்கம் இருந்தது.

10. ஏழாம் நூற்றாண்டிலேயே கொங்கு வீரர்கள் தொண்டைநாடு சென்று போரிட்டது (கொங்கத்து எழுமாத்தூர் இருந்து வாழும் சாகாடைச் சிற்றன்).

11, நடுகல்லில் பெயரும் பெருமையும் "வெண்பா" வடிவில் இருப்பது (பழமங்கலம்).

12. தமிழ்நாட்டில் தொன்மையான நினைவுக்கல் இருப்பது (பர்கூர், ஈரெட்டி மலை).