பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

249

13. கன்னிவாடிக் கல்வெட்டில் ‘ஆநிரை’ என்ற சொல் வருவது.

14. கோயிலுக்குக் கால்நடைக் கொடை கொடுக்காதது.

15. ‘ஸ்வஸ்திஸ்ரீ’ என்ற மங்கலச் சொல்லுக்குப் பதிலாக ‘சுவத்திசீ’ என்று ஒலிபெயர்ப்பும், ‘நன்மங்கலஞ் சிறக்க’ என்ற தமிழ்மொழி பெயர்ப்பும் எழுதப்பட்டிருப்பது.

16. தமிழ்நாட்டில் எல்லா அரசர்களும் ‘மனுநீதிப்படி’ ஆட்சிபுரிந்ததாகக் கூற, இம்மாவட்டத்தலைவர்கள் “வள்ளுவர் உரைத்த முப்பால் மொழியின்படியே” அரசு புரிந்ததாகக் கூறுவது.

17. வழக்கத்திற்கு மாறாக மேலிருந்து கீழாக இல்லாமல் கீழிருந்து மேலாகக் கல்வெட்டைப் பொறித்திருப்பது (அறச்சலூர், திங்களூர்) மற்றும் கல்வெட்டில் ஆய்த எழுத்து இருப்பது (அஃகம்).

18. சிலப்பதிகாரத்திற்கு முதலில் அரும்பத உரையும் விளக்க உரையும் எழுதியது (அடியார்க்கு நல்லார், நிரம்பை)

19. தூக்குத்தண்டனை கூடாது என்று (தலைவிலை) நாட்டுச்சபை முடிவு செய்தது.

20. மிகுதியான சந்தன மரங்களும் காடுகளில் மிகுதியான யானைகளும் இருப்பது.

21. கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் 1804வரை தொடர்ந்து எல்லா அரசர்களுக்கும் தாராபுரம் தலைநகராக இருந்தது.

22. கணக்கு மேதை சீனிவாச ராமானுஜம் பிறந்தது.

23. முதல் மூன்று காங்கிரஸ் மாநாடுகளில் கலந்து கொண்டு அம்மாநாடுகளின் வரலாறும் எழுதிய பகடால நரசிம்மலு நாயுடு பிறந்தது.

24. உலகப் புகழ் டென்னிஸ் வீரர்கள் அமிர்தராஜ் சகோதரர்கள் ஊர் உள்ளது.

25, மகாத்மா காந்தியடிகள் உயிரோடு இருக்கும் போதே அவருக்கு இருமுறை சிலை வைத்தது.