பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

ஈரோடு மாவட்ட வரலாறு


ஆகிய விலங்குகளும் பல்வேறு பறவையினங்களும் வனத்தில் வாழ்கின்றன. காடுகளில் வேட்டையாடுவது தடை செய்யப்பட்டு உள்ளது. இறந்த யானைகளின் தந்தம், புலி, மான் ஆகியவற்றின் தோல், மான்கொம்பு ஆகியவை வனத் துறையினரால் சேகரிக்கப்படுகின்றன.

தேக்கு, மூங்கில், வாகை, மருது, ரோஸ்வுட், ஆல், அரசு, நெல்லி, புளி, வேம்பு போன்ற பல்வேறு மரங்கள் உள்ளன. மலைவாழ் மக்கள் கோரை, புளி, நெல்லி, புங்க விதை, விறகு, கடுக்காய், கல்பாசம். பேரீச்சை போன்ற மலைபடு சிறுவிளை பொருள்களை சேகரித்து அவற்றை வனத்துறைக்குத் தந்து விலை பெறுகின்றனர்,