பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

6. மலைவாழ் பழங்குடியினர்


ஈரோடு மாவட்டத்தில் சோளகர், ஊராளிகள், இருளர், மலைக் கவுண்டர், லம்பாடிகள் ஆகிய மலைவாழ் மக்களான பழங்குடியினரும், லிங்காயத்துக்கள் எனப்படும் பழங்குடியினரும் வாழ்ந்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் சோளகர்கள் சிறப்புமிக்க, பெரும்பான்மைப் பழங்குடிகளாக உள்ளனர். இவர்கள் மலைகளிலும், மலை அடிவாரத்திலும் காட்டுப் பகுதியிலும் வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டின் தொன்மைப் பழங்குடி அட்டவணையில் உள்ள பதினேழு பிரிவினரில் சோளகரும் ஒருவர். இவர்கள் எண்ணிக்கை 4817 ஆகும் (1987).

சோளகர்களின் தோற்றம் பற்றி ஒரு கதை வழங்குகிறது. தாளவாடிப் பகுதியில் உள்ள கொத்தெசல் மலையில் பழங்காலத்தில் காரயன், மாதேசுவரன் (பில்லய்யா) என்ற இரு சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். சவணன் என்னும் அரக்கன் காரயனை இடையனாக மாற்றி மாதேசுவரனைச் சிறையிலிட்டுப் பல கொடுமைகள் செய்தான். கிருஷ்ண பகவான் அருளால் மாதேசுவரன் விடுதலையாகி அரக்கனைக் கொன்றான். ஆனால், இச்செயலுக்காகக் காரயனால் துரத்தப்பட்டான். பின்னர் இருவரும் கொத்திபோலி என்ற மலையில் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டனர். காரயன் வழிவந்தவர்கள் சோளகரும். ஊராலிகளும் ஆவர், மாதேசுவரன் (பில்லய்யா) வழி வந்தவர்கள் லிங்காயத்துக்கள் ஆயினர்.

பவானி வட்டத்தில் சுமார் 1000 மீட்டர் உயரமுள்ள சோளகனை, தாமரைக்கரை, பர்கூர், ஊசிமலை ஆகிய காட்டுக் கிராமங்களிலும் சத்தியமங்கலம் வட்டத்தில் இட்டலை, தரசலட்டி, ஆசனூர், தலைமலை ஆகிய கிராமங்களிலும் சோளகர் வாழ்கின்றனர். அவர்கள் வாழும் கிராமம் 'தொட்டி' என அழைக்கப்படுகிறது.

இப்பகுதிகளில் 16 ஒழுங்கமைக்கப்பட்ட குடியிருப்புக்களும், 23 ஒழுங்கமைக்கப்படாத குடியிருப்புகளும் உள்ளன. சோளா என்றால்