பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

த. உதயச்சந்திரன் இ.ஆ.ப.,
மாவட்ட ஆட்சியர்,
ஈரோடு மாவட்டம்,

அணிந்துரை

வணிக உலகில் கடும் போட்டிச் சூழலில் தனனை நிலை நிறுத்திக் கொண்டு, தமிழகத்தையும், இந்திய நாட்டையும் தன் தொழில் முனையும் திறனால் ஒளி விடச் செய்யும் கொங்கு மண்டலம், தன் பண்பாட்டு அடையாளங்களைத் தேடிப் புறப்பட்டிருக்கிறது.

இப்பண்பாட்டுப் பயணத்தை வழிநடத்திச் செல்பவர் பெருமதிப்பிற்குரிய புலவர் இராசு அவர்கள். அவருடைய ஆழ்ந்த அறிவு மற்றும் புலமையைக் கொண்டு படைத்திருக்கும் இத்நூல் ஈரோடு மாவட்டத்தின் பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், ஏன் ஆராய்ச்சி மாணவர்களுக்கும் ஓர் கலங்கரை விளக்கம் மட்டுமன்று: ஒரு தசுவல் தளமும் கூட.

இந்நூல் கல்வெட்டுகள் துணை கொண்டு வரலாற்று நோக்கிலும், இலக்கியச் சான்றுகள் கொண்டு ஆதாரபூர்வமானதாகவும், தொல் பழங்காலம் முதல் தமிழ் மன்னர்கள் ஆட்சிக் காலங்களினூடே கும்பினிப் படையினரின் ஆட்சி, ஆங்கிலேயரின் ஆட்சி என்று விரிந்து தற்காலம் வரை நீண்டிருக்கிறது.

ஒவ்வோர் காலகட்டத்திலும் ஆட்சிமுறை குறித்தும், சமூக வழக்கங்கள் குறித்தும், சமயங்கள் பல பரவியது குறித்தும் விளக்கமாய் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. பழங்காலப் பெருமைகளை மட்டும் பட்டியலிடாமல் தற்காலச் சாதனைகளையும் இணைத்து உரைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஈரோடு மாவட்டத்தில் கிடைந்த தொல்லுயிரி எச்சங்கள், சங்க இலக்கியங்கள் போற்றும் நொய்யல்கரை நாகரிகம், அம்மக்கள் மேற் கொண்டிருந்த கடல் கடந்த வணிகத் தொடர்புகள் யாவையும் இப்பகுதி