பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

59


உடையானான தெலுங்கநாடு உடையாள்” என்ற பெயர் காணப்படுகிறது.

கோயில் உரிமை இழந்த உவச்சர்கள் மீண்டும் ஓரளவு உரிமை பெற்றனர். மாதேவர் கோயில், திருமுற்றம் பிள்ளையார் கோயில், பிடாரியார் கோவில் மற்றுமுள்ள கோயில்களில் உவச்சர்க்கு நாலத்தொன்றும் (1/4) சிவப்பிராமணர்க்கு முக்கூறும் (3/4)” வழங்கப்பட்டது என்று கல்வெட்டுக் கூறுகிறது.

திருவிளக்குக் கொடைகள் ஏராளமாக வழங்கப்பட்டன. புதுக்குளங்கள் பல வெட்டப்பட்டன. வளம் மிகுந்த கொங்கு நாட்டில் வாங்கும் சக்தி அதிகமாக இருந்ததால் பலநாட்டு வியாபாரிகள் ஈரோட்டுப் பகுதிக்கு வணிகம் செய்ய வந்தனர். ஈரோடு மாவட்டப் பொருள்களைக் கொண்டு வணிகர்களும் பிறநாடு சென்றனர். ஈரோடு மாவட்டத்தின் பொற்காலம் கொங்குச் சோழர் ஆட்சி என்று கூறலாம்.