பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

61


வென்ற அரசர்கள் தோற்ற அரசர்களின் பெயர்களைப் புனைந்து கொள்வது மரபாதலின் கொங்குப் பாண்டியர் சிலர் இராசகேசரி, பரகேசரி என்ற கோனாட்டுக் கொங்குத் தலைவர்கள் பட்டப் பெயர்களைச் சூட்டிக் கொண்டனர்.

ஈரோடு மாவட்டப் பகுதியில் வீரபாண்டியன், சுந்தரபாண்டியன், ஸ்ரீவல்லபன் ஆகியோர் பெயர் பொறித்த கல்வெட்டுக்கள் சுமார் 120 கிடைத்துள்ளன.

விசயமங்கலக் கல்வெட்டின் மூலம் 1275ல் ஆட்சி பீடம் ஏறிய ஒரு வீரபாண்டியன் பெயர் காணப்படுகிறது. 1251-1271 ஆட்சி புரிந்த சடையவர்மன் சுந்தர பாண்டியனால் நியமிக்கப்பட்ட வீரபாண்டியன் 1265ல் ஆட்சி பெற்றவன். எனவே இரண்டு வீரபாண்டியர்கள் ஈரோட்டுப் பகுதியில் ஆட்சி செய்திருக்க வேண்டும்.

ஈரோடு மாவட்டத்தில் சுந்தரபாண்டியன் கல்வெட்டுக்கள் பல "சடையவர்மன்" என்ற பாண்டியர் பட்டம் புனைந்தும், சில கல்வெட்டுக்கள் 'எம்மண்டலமும் கொண்டருளிய சடையவர்மன் சுந்தரபாண்டியன்' என்ற பட்டப் பெயருடனும் காணப்படுகிறது. இந்தச் சுந்தரபாண்டியனை மதுரையில் ஆட்சிபுரிந்த பேரரசன் சடைய வர்மன் சுந்தரபாண்டியன் என்பர். ஆனால் அந்தச் சடையவர்மன் சுந்தர பாண்டியன் ஆட்சி செய்தது 20 ஆண்டுகள். கொங்குச் சுந்தரபாண்டியனின் கல்வெட்டுக்கள் 28ஆம் ஆட்சியாண்டு வரை நீடிக்கிறது. எனவே அக்கல்வெட்டுக்களையும் பேரரசுப் பாண்டியர் பட்டத்தைச் குட்டிக் கொண்ட கொங்குப் பாண்டியர் என்றே கொள்ள வேண்டும்.

1239இல் முடிகசூப் பாண்டிய நாட்டை ஆட்சிபுரிந்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் கொங்கு அரசர்களை ‘மச்சுனன்', 'மாமடி' (மாமா) என்ற திருமணத் தொடர்பால உறவு கொண்டாடுகின்றான். அதனால் கோனாட்டுத் தலைவர்களான கொங்கு அரசர்களின் இறுதிக் காலத்தில் எவ்வித எதிர்ப்பும் இன்றிப் பாண்டியர்கள் தம் ஆட்சியை இங்கு தொடங்கினர்.

கொங்குப் பாண்டியர் ஆட்சிக் காலத்தில் ஈரோடு மாவட்டத்தில் அலங்கியம், அனுமன்பள்ளி, ஆதியூர், ஆறுதொழு, காங்கயம்,