பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

12. போசளர் காலம்


(கி.பி.1291-1342)


மேலைச் சளுக்கியர் ஆட்சிக்குப் பின் சாசகபுரம் என்ற சோசவூரைச் சேர்ந்த யாதவர்களில் இராச்சயமல்லப் பெருமானடி' என்னும் சிறப்புப் பெயரைப் பெற்ற நிருபகாமன் (கி.பி. 1022-1040) கருநாடக மாநில ஹாசன் மாவட்ட வேளூரில் போசள மரபைத் தோற்றுவித்தான். அடுத்து வந்த போசளமன்னன் வினயாதித்தன் (கி.பி.1040-1100) தலைநகரை ஹளேபீடு என்னும் துவாரசமுத்திரத்திற்கு மாற்றினான்.

'கொங்கதேச ராசாக்கள்' என்னும் பழைய வரலாற்று நூல் போசளன் முதலாம் வல்லாளன் (கி.பி.1093) 'கொங்கு பாளையக்காரரை செயித்தான்" என்றும், நரசிங்கராயன் (கி.பி. 1172) இரண்டாம் வல்லாளன் (கி.பி.1174) ஆகியோர் கொங்கு நாட்டில் கப்பம் வாங்கினர் என்றும் கூறினாலும் காவிரிக்கு மேற்கே இருக்கிற கொங்குப் பகுதியில் ஈரோடு, கோவை மாவட்டங்களில் அதற்குரிய சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை.

இறுதி அரசனான மூன்றாம் வீரவல்லாளன் (கி.பி.1291-1344) ஆட்சி ஈரோடு மாவட்டத்தில் நடந்தது. தொறவலூர் என்ற டணாயக்கன் கோட்டை முதல் தாராபுரம் வரை அவன் கல்வெட்டுக்கள் பரவிக் கிடக்கின்றன. அந்தியூர், அயிலூர், அறச்சலூர், ஆதியூர், இராமக் கராம்பாளையம், ஈரோடு, ஊராட்சிக்கோட்டை, எலத்தூர், கத்தாங்கண்ணி, குன்னத்தூர். கூகலூர், சிலம்பூர், சிவகிரி, நம்பியூர், பட்டிலூர், பருவாச்சி, பாரியூர், பெருந்தலையூர், மறவபாளையம், மொசக்குத்தி வலசு, விசயமங்கலம், டணாயக்கன்கோட்டை ஆகிய ஊர்களில் மூன்றாம் வீரவல்லாளன் கல்வெட்டுக்கள் 37 உள்ளன. வீரவல்லாளன் திருவண்ணாமலையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்தான்.

ஈரோட்டுக் கல்வெட்டில் இவன் 'பிரதாபச் சக்கரவர்த்தி போஜன புஜபல" என்ற பட்டங்களுடன் அழைக்கப்படுகிறான். இஸ்லாமியத்