பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

ஈரோடு மாவட்ட வரலாறு

கிடக்கையில் இப்பொழுது உபானம் முதல் பஞ்சாங்கம் முதலாக சாந்து சாத்திக் கிடந்த கல்லும் எடுத்துக்கட்டி முடித்து கோயிலும் கட்டி முகிப்பித்து பூருவத்தில் மணப்படை வீட்டில் எழுந்தருளியிருந்த பெருமாளையும் எழுத்தருளுவித்து பிரதிஷ்டையும் பண்ணுவித்து" என்று கூறுகிறது. போரினால் அழிவு ஏற்படுவது இயல்பு.

மதுரை சுல்தான்கள் ஆட்சி ஈரோடு மாவட்டத்தின் தெற்குப் பகுதி வரை பரவியிருக்க வேண்டும். தாராபுரம் வட்டம் அலங்கியம் கலியுகக் கண்ணீசுவரர் கோயில் கல்வெட்டில் மதுரை சுல்தான் காலக் கல்வெட்டு உள்ளது.

"எம்மண்டலமுங் கொண்டருளிய வீரசுல்தானுக்கு
யாண்டு 751",

என்று ஹிஜ்ரி ஆண்டை அக்கல்வெட்டுக் குறிக்கிறது.