பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

67

இழிவு தீர்வித்து ஏறி அருளப் பண்ணுவித்தேன்" என்று நாகீசுவரன் கோயிலில் உள்ள வீரகம்பண்ண உடையார் கல்வெட்டுக் கூறுகிறது.

தாராபுரம் உத்தம வீரராகவப் பெருமாள் கோயிலில் உள்ள 7.8.1387ல் வெட்டப்பட்ட இரண்டாம் அரிகர உடையார் (1388-1397) கல்வெட்டு,

"கொங்க மண்டலத்து நரையனூர் நாட்டுப் பிரதான ராசதானியான ராசராசபுரத்து ராஜ்ய அபிஷேக கர்த்தரான பெருமாள் உத்தம வீரராகவப் பெருமாள் என்னும் திருநாமம் உடைய ராஜ்ய அபிஷேக விண்ணகரம் பெருமாள் உடைய திருக்கோயில் முன்பே துலுக்கர் வாணமாய் இறந்து துலுக்கர் பள்ளியாய் ஸ்தானம் தெரியாது போன இத்தை மீண்டும் பழையிலும் காட்டில் அதிசய ஸ்தாளமாக பிரதிஷ்டை பண்ணி கர்ப்பக் கிரகம், அர்த்த மண்டபம், அந்தராள மண்டபம், மகா மண்டபம். சேனை முதலியார் கோயில். இரண்டு சோபானம், மேற்கில் மண்டபம், திருமடைப்பள்ளி, திருவாசல் இவையும் சமைப்பித்து முன்பே இறங்கல் போன பெருமாள் சேனை முதலியார் இவர்களையும் ஏறியருளுவித்து பூர்வத்தில் ராசாக்கள் காலத்தில் உண்டாயிருந்த திருவிளையாட்டம் இறங்கல் மீட்டுண்டாக்கி வைத்து இந்நாட்டு இடைகுளம் நான்கு எல்லையிலுள்ள சமஸ்தப் பிராப்தியும் பூர்வ பிரகாரத்திலே சர்வமானியமாய்க் குடுத்து" என்று கூறுகிறது.

தாராபுரம் வட்டம், கொளிஞ்சிவாடியிலேயுள்ள சொக்கநாதர் கோயிலில் உள்ள இரண்டாம் தேவராயனின் (1419-1451) 1440 ஆம் ஆண்டுக் கல்வெட்டு,

"நரையனூர் நாட்டு உடைய பிராட்டிச் சதுர்வேத மங்கலத்து நாயனார் அழகிய சொக்கனார் கோயில் துலுக்க வாணத்திலே இறங்கல்பட்டு மாயநாயனார்க்குத் தன்மமாக தரங்கையா மன்றாடியார். திருப்பணி செய்விக்கையில்" என்று கூறுகிறது.

கொடுவாய் கல்வெட்டு "விண்ணிறைந்த பெருமாள் கோயில் துலுக்க வாணத்திலே இறந்து சீர்ணமாமி அனைத்தாண்டும் பாழாய்க்