பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

13. மதுரை சுல்தான்கள் காலம்


(கி. பி. 1329 - 1365)

டில்லியில் ஆப்கானிய முகமதியரான அலாவுதீன் கில்ஜி மாலிக்காபூர் என்ற தன் படைத்தலைவனை 1310ஆம் ஆண்டு பெரும் படையோடு தென்னகம் அனுப்பினார். ஈரோடு மாவட்டப் பகுதி அதனால் பாதிக்கப்பட்டது.

பத்தாண்டுகளுக்குப் பின் குஸ்ருகான் என்ற டில்லிப் படைத் தலைவன் படையெடுப்பாலும் ஈரோடு மாவட்டம் பாதிக்கப்பட்டது. முகமது துக்ளக் காலத்தில் 1327இல் மீண்டும் முகமதியப்படை ஈரோடு மாவட்டம் வழியாக மதுரை சென்றது. 1329இல் ஜலாலுதீன் அசன்சா என்பவர் மதுரையில் சுல்தான்கள் ஆட்சியை நிறுவினார். டில்லி சல்தானின் பிரதிநிதியாக இருந்த அவர் 1335 முதல் சுயேச்சையாக மதுரையில் ஆட்சி புரியத் தொடங்கினார். விசயநகர மன்னர் கம்பண உடையார் வருகையால் மதுரை சுல்தான்கள் ஆட்சி மறைந்தது.

முகமதியப்படையெடுப்பால் சில கோயில்கள் சேதமுற்றன. அவை போசளர், விசயநகர அரசர்கள், உம்மத்தூர்த் தலைவர்கள் காலத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டன என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. சடையம்பாளையம், தாராபுரம், கொளிஞ்சிவாடி, கொடுவாய்க் கல்வெட்டுக்கள் முகமதியர்களால் ஏற்பட்ட அழிவைக் கூறுகின்றன.

1373ஆம் ஆண்டு தாராபுரம் வட்டம் சடையம்பாளையம் "நாகீசுவார் ஆவுடையார் துலுக்கர் வாணத்தில் இறங்கல்பட்டுப் புதியதாக ஆவுடையார்" அமைக்கப்பட்டதாக வீரகம்பண்ண உடையார் கல்வெட்டுக் கூறுகிறது.

அதே சடையம்பாளையத்தில் 1373 ஆம் ஆண்டு "குறையூரில் வடுகப்பிள்ளையார் துலுக்கர் வாணத்தில் துன்பப்படுகையில் இந்த