பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

65

மகாபிரதானி மாதப்ப தண்டநாயகன், அவன் மூன்று மக்கள் ஆகியோர் ஆட்சி ஈரோட்டுப் பகுதியில் மக்கள் போற்றும் வண்ணம் நடைபெற்றிருக்க வேண்டும். பல கோயில்களில் 'சித்கரகண்டன் சந்தி', 'இராகுத்தராயன் சந்தி' என்ற பெயரில் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பல ஊர்கள் 'சித்கரகண்ட நல்லூர்'. 'இராகுத்தராய நல்லூர்' என்று அழைக்கப்பட்டன.

மாலிக்காபூரால் தோற்கடிக்கப்பட்டு வீரவல்லாளன் தன் தலைநகரை இழந்து துன்பப்பட்டான். இருப்பினும் கி.பி. 1342 வரை அவன் கல்வெட்டுக்கள் தொடர்ந்து ஈரோடு மாவட்டம் முழுவதும் காணப்படுகின்றன.