பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

ஈரோடு மாவட்ட வரலாறு

அரிகர உடையார்" என்ற பெயரில் கல்வெட்டுக்களைப் பொறித்துள்ளார். விசயமங்கலம் (1412) மடவளாகம் (1408) ஆகிய ஊர்களில் அவர் கல்வெட்டுகள் உள்ளன.

இரண்டாம் தேவராய உடையார் (1422-1445) பிரபுடதேவர் எனப் புகழப்பட்டவர். அவர் காலத்தில் காரியத்துக்குக் கர்த்தர் மாய நாயக்கர் நன்மைக்காக 1441ஆம் ஆண்டு கொளிஞ்சிவாடி அழகிய சொக்கனார் கோயிலைப் பதுப்பித்து ஊரவர் வசமிருந்த மானிய பூமிகளையும் தரங்கைய மன்றாடியார் கோயிலுக்கு அளிக்கச் செய்தார்,

சிவகிரி, தளவாய்பட்டணம் கோயில்கள் தேவராய உடையார் காலத்தில் புதுப்பிக்கப்பட்டன. பவானி வட்ட வரதநல்லூர், ஓரிச்சேரி ஆகிய இடங்களில் கன்னடிய பிராமணர்களுக்கு அக்கிரகாரங்கள் அளிக்கப்பட்டன.

இரண்டாம் தேவராயன் இளையமகன் மல்லிகார்ச்சுன ராயர் (1447-1465) கல்வெட்டுக்கள் காங்கயம் வட்டம், வெள்ளகோயில், நத்தக்காடையூர் ஆகிய ஊர்களில் இருக்கின்றன. இரண்டாம் விருபாட்சன் (1465-1485) கல்வெட்டு ஈரோடு வட்டம் நசியனூரில் உள்ளது.

கிருஷ்னா தேவராயர் (1509-1529) உம்மத்தூர்த் தலைவனை வென்று கொங்கு நாட்டுக்குப் பருவதராகுத்தன் என்பவனை ஆட்சியாளனாக நியமித்தார். அவன் கல்வெட்டு ஈரோட்டில் உள்ளது (1511).

கிருஷ்ண தேவராயர் தளவாய் கொண்டமரசர் பெயர் காங்கயம் வட்ட ஆறுதொழு (1528), காடையூர் ஆகிய ஊர்க் கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. கொங்கு நாட்டு அதிகாரி வாலராச உடையார் ஆறுதொழு, பவானி, காடையூர்க் கோயிலில் திருப்பணிகள் மேற் கொண்டு கொடையும் அளித்துள்ளார். மருதுறை ஆலால சுந்தரர் மடத்திற்கும், அக்காலத்தில் கொடைகள் அளிக்கப்பட்டன. அடுத்து அச்சுத தேவராயர் (1529-1542) ஆட்சிக்கு வந்தார்.

ஊஞ்சலூர், எறகணஹள்ளி, அலங்கியம், கீரனூர், நசியனூர், அறச்சலூர், பிடாரியூர் ஆகிய ஊர்களில் அச்சுதராயர் கல்வெட்டுக்கள்