பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

77

குள்ளத்தூர், காங்கயம், பெருந்துறை, கோசணம், கொளாநல்லி, பாலத்தொழு போன்ற பல ஊர்களில் கோட்டைகள் இருந்தன. கோட்டையில் சிறு படையும் ஒரு தலைவனும் இருந்தனர்.

ஈரோடு கோட்டையில் அய்யப்பநாயக்கன், அக்காரெட்டி போன்றவர்கள் தலைவர்களாக இருந்துள்ளனர்.

ஈரோட்டைத் தலைமையிடமாகக் கொண்டு ஓமலூர், காவேரிபுரம், சாம்பள்ளி, அந்தியூர், குன்னத்தூர் போன்ற பகுதிகளில் ஆட்சி புரிந்த கெட்டி முதலியார் வழிவந்த தலைவன் வணங்காமுடிக் கெட்டிமுதலி என்று பெயர் வைத்துக் கொண்டு நாயக்கர் ஆட்சிக்குக் கட்டுப்படாமல் தன் பெயரில் கல்வெட்டுக்கள் பொறித்தான். அவனுடைய பல கல்வெட்டுக்கள் பவானி, அத்தாணி போன்ற பகுதிகளில் உள்ளன.

திருமலை நாயக்கர் தளவாய் இராமப்பய்யனை ஈரோட்டுக்கு அனுப்பி வணங்காமுடிக் கெட்டியை அடக்குமாறு கூறினார், இராமப்பய்யன் பல நாள் போரிட்டும் கெட்டி முதலியை அடக்க முடியவில்லை. தன் இயலாமையையும், கெட்டி முதலியார் வீரம் பற்றியும் இராமப்பய்யன் எழுதிய கடிதம் கண்ட திருமலை நாயக்கர் கெட்டி முதலியாரோடு சமாதானம் செய்து கொண்டு மைசூர் ஆபத்தைத் தடுக்க கெட்டிமுதலி துணை வேண்டுமென்று யோசித்து அவருக்குப் பல மரியாதை செய்து தொடர்ந்து ஆளுமாறு பணித்தார்.

சொக்கநாத நாயக்கர் காலத்தில் கொங்கு 24 நாடு 4 கட்ட மனைகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு கட்டமனைக்கும் ஆறு நாடுகளை உள்ளடக்கி நான்கு தலைவர்களை நியமித்தார். தாராபுரம், ஈரோடு, அவிநாசி, டணாயக்கன்கோட்டை ஆகிய நான்கு கட்ட மனைகளில் ஈரோடு கட்டமணைக்குக் காங்கயம் பல்லவராய கவுண்டர் தலைவராக நியமிக்கப்பட்டார்.

சிவகிரி, பிடாரியூர், தாராபுரம் ஆகிய ஊர்களில் வீரப்பநாயக்கர் கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. சிவகிரிக் கல்வெட்டில் ரங்கராயர் என்பவரும், தாராபுரம் கல்வெட்டில் தம்பிக்கு நல்லார்பிள்ளையும்