பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

93


வெள்ளைக்காரன்" என்ற நாட்டுப்பாடல் கும்பினி அதிகாரத்தை விளக்கும்.

"ஆர்டீசு துரையவர்கள் நாளையில் கிஸ்திபந்தி வாய்தாப் பிரகாரம் கும்பினி காயிதம் மேரைக்கு பணம் செலுத்த இயலாமல் போன படியினாலே ஆயர் துரை வந்து என் சீமையை ஜப்தி செய்து போட் டார்கள்" என்கிறார் ஒரு பாளையக்காரர். ஜப்தி செய்தபின் அரசு செய்த அப்பாளையக்காரருக்கு 15 ரூபாயும், இருபது ரூபாயும் சம்பளமாக கொடுத்தனர்.

நிலையான ஆட்சி 1799இல் அமைந்தபின் அரசுப்பணிகளைக் சூம்பினியார் மேற்கொண்டார்கள். ஒரு ஆவணம்.

"தாராபுரம் சீமைக்கு அமுலாக வந்த ராசமானிய ஸ்ரீ ஆர்டீ.சு துரையவர்கள் சீமையை 25 பாகம் சங்கிலியால் மலை. கரடு, பாதை. அனாதி தரிசு, ஆறு, ஓடை, நிலம் சகலமானதும் அளந்து பதிவு செய்தார்" என்று கூறுகிறது.

"மகாமண்டலீசுவரராகிய கும்பினி துரையவர்கள் ராச்சியம் பண்ணுகிறபோது மகா.ரா.ரா.ஸ்ரீ ஆர்டீசு துரையவர்கள் அதிகாரத்தில்" என்பது போல ஆவணங்கள் எழுதினர், தங்கள் அரசர்களுக்கு முன்பு கொடுத்த பட்டங்களை கும்பினி அதிகாரிக்கும் கொடுத்தனர்.

"கும்பினியாரவர்கள் தாராபுரம் சீமை துரைத்தனத்துக்கு வந்த மகா.ரா.ரா.ஸ்ரீ மக்களூட்டு துரையவர்கள் அதிகாரத்தில்" என ஒரு ஆவணம் கூறுகிறது.

பல துறைகளிலும் மேல்நாட்டு முறைப்படி அலுவல்களை மேற்கொண்ட கும்பினியார் பொறுப்புக்கள் பெருகியதன் காரணமாக 1858இல் தங்களுக்கு உள்பட்டிருந்த பகுதிகளை இங்கிலாந்து அரசிடம் ஒப்படைத்தனர்.