பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாது

95


மக்கள் எழுதும் ஆவணங்களிலும் அரசர் அரசியின் பெயரைப் பொறித்தனர். ஈரோடு மாவட்டத்தில் விக்டோரியா மகாராணியின் பெயர் பொறித்த மூன்று கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. விசய மங்கலம் நாகேசுவரர் கோயிலில் இரண்டு கல்வெட்டுக்களும், ஊத்துக்குளியை அடுத்துள்ள தளவாய்பாளையம் விசயபுரியம்மன் கோயிலில் ஒரு கல்வெட்டும் கிடைத்துள்ளது அவற்றில்

"இந்திய சர்க்கார் மகாராணியார் அவர்கள் அரசாட்சியில் இங்கிலீஸ் துரைத்தனத்தில்"

"மகத்துவம் தங்கிய இந்தியா சக்கரவர்த்தினியார் அவர்கள் அரசாட்சியில்""

என்ற தொடர்கள் தொடக்கத்தில் காணப்படுகின்றன.

மேனாட்டு அறிவியல் வளர்ச்சியும், நவீன தொழிற் கருவிகளும், போக்குவரத்து, தொலைத்தொடர்பு, கல்விமுறை போன்ற பலவும் இந்தியாவை வந்தடைந்தன. எனினும், இங்கிலாத்தின் சந்தையாகவும் செல்வ வளத்தையெல்லாம் இங்கிலாந்துக்கு வாரிக் கொடுக்கும் அமுத சுரபியாகவும் இந்தியா இருந்தது.

ஏழாம் எட்வர்டு மன்னர் மறைவிற்குப் பின்னர் மன்னர் 5ஆம் ஜார்ஜ் இங்கிலாந்தில் முடிகுடினார். பிகப்பெரிய விழா நடைபெற்றது. இந்தியர்களுக்கு வியப்பை ஏற்படுத்த, பயபக்தியை ஊட்ட டில்லி மாநகரிலும் மிகப்பெரிய "கார்னேஷன் தர்பார்" நடைபெற்றது (1912). நாடெங்கும் நடைபெற்ற “முடிசூட்டுவிழா" கொண்டாட்டத்தினை ஓட்டி ஈரோட்டில் ஒரு மைதானத்திற்கு 'கார்னேஷன் கிரௌண்டு" என்று பெயரிடப்பட்டது. பெருந்துறையில் ஒரு விளக்குத்தூண் நிறுவப்பட்டது. பழையகோட்டைப் பட்டக்காரர் நல்லதம்பிச் சர்க்கரை உத்த மக்காயிண்ட மன்றாடியாருக்கு 'ராயபகதூர்' பட்டம் வழங்கப்பட்டது.

மன்னர் ஆட்சி பூலோக ராமராஜ்யமாக நடைபெறுகிறது என்றும் என்றென்றும் மன்னருக்கும் இராணிக்கும் விசுவாசமாக இருப்போம் என்றும் பாராட்டு மடல்களில் கூறப்பட்டது.