பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

ஈரோடு மாவட்ட வரலாறு


சங்கங்கள்

காங்கிரஸ் பேரியக்கத்துடன் ஈரோட்டில் விடுதலை வீரர்கள் பல அமைப்புக்களையும் ஏற்படுத்தி மக்களிடையே தேசிய உணர்ச்சியை ஊட்டினர். 'தேசிய வாலிபர் சங்கம்' 'ஜவகர் வாலிபர் சங்கம்' ஆகியவை முக்கியமானவை. 1942இல் காங்கிரஸ் பேரியக்கம் தடை செய்யப்பட்டப் போது 'பாரதி வாலிபர் சங்கம்” என்று தொடங்கி இயக்கத்தை தடத்தினார். அதன் உறுப்பினர்கள் 4 அணா சந்தாவுடன் மாதம் ஒரு சிட்டா கதர் நூல் கொடுக்க வேண்டும். ஈரோடு கருங்கல் பாளையத்தில் தங்கப் பெருமான் பிள்ளை பாரதி வாசகசாலை தொடங்கி விடுதலை உணர்வைப் பரப்பினார்.

காந்தியடிகள்

அண்ணல் காந்தியடிகள் 18.8.1920; 25.9.1921; 8.3.1925; 11.2.1934 ஆகிய நாள்களில் ஈரோடு வருகை புரிந்தார். 1934இல் ஈரோடு தாலுக்கா போர்டு தலைவர் வி.எஸ். ராஜாக்கவுண்டர்; ஈரோடு நகராட்சித் தலைவர் கே.ஏ. ஷேக்தாவூது; வணிகர் சங்கம்; சுதேச ஜவுளி வர்த்தகர் சங்கம்; ஷராப் வர்த்தகர் சங்கம்; அரிசன சேவா சங்கம் ஆகியவை வரவேற்பளித்தன. இலண்டன் மிஷன் பயிற்சிப்பள்ளி மாணவர்கள் தாங்கள் நெய்த பாயை அன்பளிப்பாகக் கொடுத்தனர்.கொடுமுடியிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிறதலைவர்கள்

ஜவகர்லால் நேரு, இராஜேந்திர பிரசாத், அலி சகோதரர்கள். சரோஜினி தேவி, பாரதியார், வ.உ.சி. திரு.வி.க, வரதராஜுலு நாயுடு போன்ற பலர் ஈரோட்டுக்கு வருகைபுரிந்து விடுதலைப் போரை ஊக்குவித்தனர்.

விடுதலைப்படை மாநாடு

இந்தியா முழுவதும் 'நவஜவான் பாரத் சபா' என்ற அமைப்பு தீவிரமாக இருந்தது. தமிழகம் தழுவிய பெரிய மாநாடு 1931இல் ஈரோட்டில் நடைபெற்றது. கேசவலால் காளிதாஸ் சேட் முன்னின்று