பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 65 உடற்பயிற்சி என்ன செய்கிறது என்றால், உடலிலுள்ள உறுப்புக்களின் ஆற்றலை, மேலும் மேலும் உறுதியாக்கி உயர்த்திவிடுகின்றது. உறுப்புக்களின் ஊக்கம்: உடற்பயிற்சியால், நரம்புகள் உறுதி பெறுகின்றன. நரம்புகளிடையே ஒருங்கிணைந்த செயல்கள் செழிப்படைகின்றன. அவற்றினிடையே, ஏற்படும் செய்திப் பரிமாற்றங்களில் சிறப்பும் சீர்மையும் மிகுதியாகின்றன. இதயத்தின் ஆற்றல் இதமாக உயர்கிறது. ஒவ்வொரு முறை இதயம் துடிக்கின்றபோதும், இறைக்கும் இரத்தத்தின் அளவு அதிகமாகிக் கொள்கிறது. நாடித் துடிப்பின் எண்ணிக்கை குறைகிறது. - நுரையீரலின் காற்றுக் கொள்களம் மிகுதியாகிறது. அதனால் இரத்த ஓட்டம் அதிகமாகிறது, விரைவு பெறுகிறது. அதனால் உடலில் ஆற்றலும் உயர்வடைகிறது. தசைகளோ, தங்களுக்குத் தேவையான இரத்தத்தை, வேண்டிய அளவு பெற்றுக் கொள்கின்றன. தசைகள் திரட்சி பெறுகின்றன. வலிமை அடைகின்றன. உழைக்கும் ஆற்றலை விருத்தி செய்து கொள்கின்றன. தசைகளிலே பிராணவாயு தட்டுப்பாடு எதுவும் ஏற்படுவதில்லை. எலும்புகளும், எலும்புகளைச் சேர்த்துக் கட்டும் தசைநார்களும், தசை நாண் களும், வலிமை