பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 75 (Ankles): (pptå15760 ept (B561 (Knee Joint); (3)(B)EL முட்டு (lip oint), முதுகெலும்பு முடிவும், இடுப்பெலும்பு முதலும் உள்ள மூட்டு (Spine Joint) தோள்மூட்டு (Shoulder Joint) GLIT6ür p6uó óleo, la LI Ll60 6OTLD 60, ஒன்றுக் கொன்று நீண்டும் குறுகியும் நிறைவாகப் பங்கு பெறுகிற இயக்கமாக அமைத்திட இந்த வகை உடற்பயிற்சிகள் உதவுகின்றன. அலுவலகங்களில் பணியாற்றுவோர், நடனமாடு வோர், வேகமும் கனமும் தேவைப்படாத விளை யாட்டுக்களில் ஈடுபடுவோர்; பொதுவாக உடல்நலக் குறைவால், உடலில் வலியும் வேதனையும் வந்துபோக வருந்திக் கொண்டிருப்பவர்களுக்கும், இப்படிப்பட்ட நெகிழ்ச்சிப் பயிற்சிகள் நன்கு உதவும். நெகிழ்ச்சிப் பயிற்சிக்குரிய விளையாட்டுக்கள் நீச்சல் பயிற்சி; கோல்ப் விளையாட்டு, (இதில் நடை அதிகம்) எளிதான ஜிம்னாஸ் டிக் ஸ் இயக்கங்கள்; ஓடுகளப்போட்டிகள். ஓரிடத்தில் அமர்ந்து பயிற்சிகள் செய்து பயன்பெற வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு, யோகாசனப் பயிற்சிகள் நன்கு உதவும். யோகாசனங்கள் எல்லாம் உறுப்புக்களை முன்புறமாக மடித்தல், நீட்டுதல்; இடுப்பை வளைத்தல், முறுக்குதல் போன்றவற்றிற்கு, முக்கியத்துவம் அளிக்கின்றன.