பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்


‘உடம்பால்’ என்றார். உடம்பு + ஆல் என்றார். உடம்பு + பால் என்பது, ‘உடம்’ ன்றால் ‘உடனே’ என்று அர்த்தம். அதாவது பால் உணர்வு செய்கைகளில் ஈடுபடும்போதே உடனே உடம்பு அழிந்துவிடுகிறது என்கிறார்.

‘உடம்பு+ஆல்’ என்கிறபோது, ‘உடம்பு’ என்றால் ஆசையால் வருந்து, ‘ஆல்’ - என்றால் ஆலகால விஷம்.

ஆக ஆசை என்கிற ஆலகால விஷம் உடம்பிலே பாயும்போது, அங்கே உடல் மட்டும் அழியவில்லை. உயிரும் அழிகிறது. உயிர் அழிந்தால் அம்சம் எங்கே? மனிதன் எங்கே? வாழ்க்கை எங்கே? அங்கே ‘திடம் படுமெய் ஞானம்’ எல்லாமே அழிந்து போகிறது என்கிறார்.

‘திடம்’ என்றால் தைரியமும், உறுதியும், வலிமையும் நிறைந்த கலங்கா நிலை. உடல் அழிகிறபோது, மேலே கூறிய எல்லாமே அழிந்து போகிறது அல்லவா!

‘படு’ என்றால் கூர்மை, நன்மை, பேரறிவு என்று அர்த்தம். உடலிலே வலிமை எல்லாம் குன்றுகிறபோது, அவனிடமுள்ள அறிவுக் கூர்மை. அதனால் அடைகிற ஆயிரமாயிரம் நன்மை, அவனுக்குள்ளே ஊறுகிற பேரறிவு எல்லாமே அழிந்து போகிறது.

‘மெய்’ என்றால் உண்மை, சத்தியம், திண்மை, நீதி, பசுமை, வாய்மை என்று பல அர்த்தங்கள் உண்டு.

‘ஞானம்’ என்றால் கல்வி, கேள்வி, விவேகம், தெளிவு, நல்லொழுக்கம், வித்தை.