பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


o

எஸ்.நவராஜ் செல்லையா 43 ۰گه

உடலுக்கு இத்தனை பெயர்கள் இருந்தாலும், அதை உடம்பு என்று சொல்லும் பொழுதுதான் ஏதோ சுவை இருக்கிறதுபோல நமக்குத் தெரிகிறது அல்லவா? அப்படி ஏன் தெரிகிறது என்றால், உடம்பு என்கிற சொல்லுக் குள்ளேதான் ஒராயிரம் இரகசியங்களை அடக்கி வைத்து இருக்கிறார்கள்.

'உடம்பு' என்றாலே ஆசையால் வருந்து என்றுதான் அர்த்தம். யுத்தம் செய்' என்று அர்த்தம்.

உடம்பு என்பது உல்லாசத்தின் ஊற்றுக்கிணறு அல்ல. அது உபத்திரங்களின் பொங்குமாங்கடல். உணர்ச்சி நெருப்பால் உருக்குலையும் இரும்புப் பெட்டகம். ஆக, உடம்பு என்பது உலக வாழ்க்கையை எதிர்த்துப் போராட உதவுகின்ற ஒரு உயிர் சாதனம் என்றே சொல்லலாம்.

மாறுபாடு கொண்ட இயற்கையுடன், கோபம் கொள்ளாது அதனை எதிர்த்து, யுத்தம் செய்து, உயிருக்கு இருப்பிடமான உடலைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றுதான் 'உடம்பு’ என்று இரகசியப் பேரிட்டு அழைத்தனர்.

உடம்பைப் பற்றியே ஆயிரம் ஆயிரம் பாடல்களை, உருகிப் பாடிய திருமூலர், ஒரு பாடல் வரியில் இந்த உலகளாவிய உண்மையை உருக்கமாகச் சொல்லி

விடுகிறார்.

'உடம்பால் அழியின் உயிரால் - அழிவர்"

உடம்பினால் அழிகிறபோது உயிரும் அழிந்து போகிறது. எப்படி அழிகிறது? அதைத்தான் 'உடம்+பால்