பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


52 * உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்

வெளியாகி வரும்போது அதற்கு இடங்கொடுக்கத்தான் கால் வயிற்றைக் காலியாக வைத்திருக்கிறோம். அந்தயிடம் இருப்பதால்தான் கரியமில வாயு அங்கே யிருந்து சுற்றிச்சுழன்று கீழே குதத்தின் வழியாகக் காற்றாக வெளியே வந்துவிடுகிறது.

இப்படிச் செய்யாமல் நீங்கள் முக்கால் வயிறு, முழு வயிறு சாப்பிட்டுவிட்டு, அதற்கு மேல் தண்ணிரை மூச்சு முட்டக் குடிக்கும் பொழுது ஏற்படுகிற ஜீரண வேலையில் (Digestion) கரியமில வாயு உண்டாகி அது வெளியேறு வதற்கு வழியில்லாமல் திண்டாடி, அது மார்புப் பகுதி, முதுகுப் பகுதியென்று உடலுக்குள்ளே பரவுவதாலேதான் மூச்சுப் பிடியால் கஷ்டப்படுகின்றார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே, சாப்பாடு என்று நீங்கள் சத்தம் போட்டுக் கூவினாலும், சுகமாக அரை வயிறு சாப்பிட வேண்டும். நலமாக நாட்களைக் கழிக்க வேண்டும்.

ஒருவேளை உண்பவன் யோகி. இருவேளை உண்பவன் போகி (குடும்ப ஸ்தன்) மூன்று வேளை உண்பவன் ரோகி (நோயாளி) பல தடவை சாப்பிடுபவன் துரோகி. அதாவது அவனே அவனுக்கு எதிரியாகித் துரோகம் இழைத்துக் கொள்கிறான்.

நீங்கள் யோகியாகி அன்றாடம் ஒரு வேளையே சாப்பிடா விட்டாலும், மூன்று வேளை மூக்கு முட்டச் சாப்பிட்டு ரோகியாக அதாவது அன்றாடம் நோயாளியாக ஆகிவிடாதீர்கள். மூன்று வேளை சாப்பிட்டாலே ரோகி என்றால் பல தடவை சாப்பிடுகிறவர்களைத் துரோகி