பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


68

இரகசியம் - 8

2–60)l

ஒரு ஏழைப் புலவன் ஒரு திருமணத்திற்குச் சென்று பந்தியிலே உட்காருகிறான். அவனுக்கு இலை போடப்பட்டுப் பண்டங்கள் பறிமாறப்படுகின்றன. பரிமாறிய பதார்த்தங்களைப் பார்த்து அவன் எகத்தாளமாகச் சிரிக்கிறான்.

போட்டிருந்து சட்டையைக் கழட்டுகிறான். "ஏ... சட்டையே... இந்தா விருந்து. சாப்பிடு' என்று கத்துகிறான். அவன் கூப்பாட்டைக் கேட்டுச் சுற்றி யிருந்தவர்கள் ஒடி வந்து என்னவென்று கேட்கிறார்கள்.

அவன் எல்லோரையும் வெறிக்கப் பார்க்கிறான். முறைத்துப் பார்த்தபடி பேசுகிறான். முதலில் நான் கிழிந்த உடை போட்டுக் கொண்டு வந்தேன். என்னை உள்ளே விடமாட்டேன் என்று விரட்டியடித்தார்கள். நான் ஒடிப்போய் சலவைத் தொழிலாளி ஒருவனிடம் இந்த